ஆர்.பார்த்திபன் நடித்த “சுழல்” படம் ப்ரைம் அமேசானில் வெளியானது

திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிபார்க்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடித்த சுழல் படம் ப்ரைம் அமேசானில் வெளியானது. இப்படத்தில் பார்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி,  நிவேதிகா சதீஷ், சந்தானபாரதி, குமரவேல் உட்பட தெருக்கூத்து கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள். “மயான கொள்ளை”  என்ற கிராமத்துக் கோயில் திருவிழாவை தத்ரூபமாக படம் பிடித்திருக்கும் விதம் அற்புதமாக இருக்கின்றது. தெருக்கூத்து கலைஞர்களின் ஆட்டமும் நையாண்டி மேளமும் நகரவாசிகள் அனைவரையும் கிராமத்துப்பக்கம் திசை திருப்பிவிடும் அளவிற்கு படம் எடுக்கப்பட்டுள்ளது. மயான கொள்ளை நிகழ்வில், கன்னிப் பெண்கள் கடத்தலும் கொலைகளும் பதைபதைக்க வைக்கின்றன. ஒவ்வொரு காட்சிகளையும் எதிர்பாப்புகளுடன் நகர்த்தியிருக்கின்றார்  எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் புஸ்கர் மற்றும் காயத்திரி.