ஆர்.ஜி.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் பதிய படம்

கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்‌ஷ்மன் குமார் தனது
7-வது படைப்பாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.

இதில், R.J.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார்.
வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்களிடம் தனி இடம் பிடித்து வரும் R.J.பாலாஜி நடிக்கும் இப்பட கதையும் வித்தியாசமான கதை களம் கொண்டதுதான். கதாநாயகியாக வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
R.J.பாலாஜி ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு
நடைபெற்று வருகிறது.  படத்தின் பெயரும்,
மற்ற நடிகர், நடிகைகள் விவரமும் விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படத்தை ஜியன் கிருஷ்ணகுமார் ( jiyen krishnakumar ) இயக்குகிறார். இவர், பிரதிவ்ராஜ் நடித்த மலையாள படமான “தியான்” ( ‘TIYAAN’ ) ஹிட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது இப்படம் டார்க்-காமெடி-திரில்லர் படமாக உருவாகிறது. இதன் பூஜை இன்று (மார்ச்4) எளிமையாக நடை பெற்றது. மார்ச் 23 முதல் சென்னையில் படபிடிப்பு ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெறுகிறது.