நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 வது பொதுக்குழு கூட்டத்தில் சங்கத் தலைவர் எம்.நாசர், பொதுச்செயலாளர்  விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ். முருகன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில், பழம்பெரும் நடிகை  எம்.என்.ராஜம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் இடம்பெற்ற மூத்த நடிகை  ஊர்வசி, நடிகர்கள் எம். எஸ்.பாஸ்கர், ஜிவி.பிரகாஷ் மூவரும் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.