புஷ்பநாதன் ஆறுமுகம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “க.மு.க.பி.”. அதாவது கல்யாணத்துக்கு முன் கல்யாணத்துக்கு பின் என்பதின் சுருக்கத்தையே படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் விக்னேஷ் ரவி, டி.எஸ்.கே., சரண்யா ரவிச்சந்திரன், பிரியதர்ஷிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ்ரவியும் சரண்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியர்கள். விக்னேஷ்ரவி திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற லட்சியக் கனவோடு படத்த்கயாரிப்பாளர்களிடம் கதை சொல்லிச் சொல்லி வாய்ப்பு கிடைக்காமல் அலைந்து திரிகிறார். மனைவியான சரண்யா ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து குடும்பச் செலவை சமாளிக்கிறார். இதனால் விக்னேஷ்க்கும் சரண்யாவுக்கும் கருத்து வேறுபாடாகி விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தை நாடிச் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வாழ ஆலோசனை வழங்கப்படுகிறது. அந்த ஆலோசணையை ஏற்றார்களா? இல்லையா? என்பதுதான் கதை. காதலிப்பதின் உற்சாகத்தையும் கல்யாணத்துக்கு பிறகு அவமானங்களை தாங்கிக் கொள்வதிலும், தயாரிப்பாளர்கள் ஏமாற்றும்போது கோபத்தை கொப்பளிப்பதிலும் விக்னேஷ்ரவின் நடிப்பு மெச்சும்படி இருக்கிறது. விரக்திக்கு ஒரு உருவம் கொடுத்து நடித்திருக்கிறார் விக்னேஷ் ரவி. வாழ்த்துக்கள் விக்னேஷ். வேலக்குச் செல்லும் ஆதங்கத்தையும் அகம்பாவத்தையும் எதார்த்தமாக வெளிக்காட்டும் சரண்யாவின் நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. தூசியை தட்டிவிடுவதுபோல் அசால்ட்டாக நடித்து பாராட்டை பெறுகிறார் சரண்யா. மனைவியை அடக்கியாள நினைப்பது தவறு என்பதையும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது எப்படி என்பதையும் இப்படத்தின் மூலம் பாடம் நடத்தியுள்ளார் இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம். அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய குடும்ப படம்தான் “க.மு. க.பி.”
“க.மு. க.பி.” திரைப்பட விமர்சனம்
