தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில், ‘மாயன்’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் மற்றும் ஜி.வி.கே.எம் எலிபண்ட் பிச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள மாயன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜேஷ் கண்ணா. இந்நிலையில், மாயன் படக்குழுவினர். இப்படத்தின் கதாபாத்திரங்களை மோஷன் போஸ்டராக லஹரி மற்றும் டி-சீரிஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் வினோத் மோகன் – ஆதி சிவனாகவும், ஜான் விஜய் – எமதர்ம சக்கரவர்த்தியாகவும் மற்றும் சாய் தீனா – வீரா சூரனாகவும் வரைகலை வடிவில் பிரம்மாண்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவே உலகத்தின் முதல் கேரக்டர் இன்ட்ரொடக்ஷன் இல்லுஸ்ட்ரேட்டட் மோஷன் போஸ்டர் என்று படக்குழுவினர் சார்பில் பதிவிட்டுள்ளனர். இந்த மோஷன் போஸ்டர் இப்படத்தின் மீதான ஆர்வத்தையும், எதிர்ப்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது.