ராம் சரண் நடிக்கும் புதிய படம் ‘பெத்தி’

ராம் சரண், புச்சி பாபு சானா, வெங்கட சதீஷ் கிலாரு விருத்தி சினிமாஸ் இணையும் ‘பெத்தி’ படம் ஏப்ரல் 30 அன்று  திரையரங்குகளில் வெளியாகிறது. ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் கிராமத்து பின்னணியில்  “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட  பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வெளியீட்டு தேதி பதாகையில், ராம் சரண் இதுவரை காணாத முற்றிலும் புதிய தோற்றத்தில் தோன்றுகிறார். நீளமாக அலங்கோலமாக இருக்கும் முடி, கனமான தாடி, மூக்கில் அணிந்த வளையம் ஆகியவை அவரது உருவத்திற்கு தனிச்சிறப்பு சேர்க்கின்றன. இவருடன் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு,  திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.******

தொழில்நுட்பக் குழு : இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்   தயாரிப்பாளர்:  வெங்கட சதீஷ் கிலாரு இணை தயாரிப்பாளர்: இஷான் சக்சேனா இசை: A.R. ரஹ்மான் ஒளிப்பதிவு: R. ரத்னவேலு கலை இயக்கம்:  அவிநாஷ் கொல்லா படத்தொகுப்பு: நவீன் நூலி நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார் மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ மக்கள் தொடர்பு : யுவராஜ்.