“ராபர்” திரைப்பட விமர்சனம்

சினிமா பத்திரிகையாளர் கவிதா தயாரிப்பில், எம்.எஸ்.பாண்டி இயக்கத்த்கில் சத்யா, டேனியல் அன் போப், தீபா சங்கர், ஜெய்பிரகாஷ், பாண்டியன், சென்ராயன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராபர்”. தொழில் பயிற்சி நிருவனத்தில் வேலை பார்க்கும் சத்யா பெண்ணாசை பிடித்தவர். பெண்களுடன் உல்லாசமாக இருக்க பணம் தேவைப்படுகிறது. இதனால் முகமூடி அணிந்து கொண்டு தனியாக வரும் பெண்களின் நகைகளை வழிப்பறி செய்து அதை விற்று உல்லாசம் அனுபவிக்கும் பேர்வழியாக வாழ்ந்து வருகிறார். சத்யாவுக்கு இதே வழிப்பறி தொழில் செய்யும் டேனியலின் பழக்கம் ஏற்படுகிறது. ஒருமுறை தனியாக வந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் நகையை பறித்திக் கொண்டு சத்யா தப்பி ஓடுகிறார். நகையை பறிகொடுத்த அந்த பெண் சத்யாவை விரட்டிக் கொண்டு ஓடி வரும்போது கீழே விழுந்து இறந்துவிடுகிறாள். இறந்த பெண்ணின் தந்தைதான் ஜெய்பிரகாஷ். தன் மகளின் சாவுக்கு காரணமான திருடனை கண்டுபிடித்து தன் கையால் கொலை செய்ய வேண்டும் என்று துடிக்கிறார். இந்நிலையில் சத்யாவை ஜெய்பிரகாஷ் கடத்திவிடுகிறார். கடத்தப்பட்ட சத்யா என்ன ஆனார்? சத்யாவுக்கும் டேனியலுக்கும் உள்ள தொடர்பு எப்படி ஏற்பட்டது? என்பதுதான் கதை. பட்டணங்களில் இன்றளவும் வழக்கமான வழிப்பறி கொள்ளையை வித்தியாசமான ஒரு கதையாக உருவாக்கி விறுவிறுப்புடன் அசத்தியிருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.பாண்டி. மனிதம்பாதி மிருகம்பாதி என்ற இருவேறு கதாபாத்திரத்தில் நடித்ய்ஹிருக்கும் சத்யாவின் வெவ்வேறாக முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்கள்ன் பாராட்டை பெறுகிறார் சத்யா. டேனியலும் சத்யாவின் நடிப்புக்கு இணையாக ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். குணசித்திர நடிகரான ஜெய்பிரகாஷ் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்து உழைத்திருக்கிறார். காட்சிக்கு காட்சி அதிர்வூட்டும்படியும் ஆச்சரியப்படும் விதமாக திரைக்கதை அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து நடக்கவிருக்கும் காட்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது. நாவல் படிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வரப்பிரசாதம்.