நட்டி நட்ராஜ் நடிக்கும் “ரைட்” திரைப்படம் செப்.26ல் வெளியீடு

ஆர்.டி.எஸ்.பிலிம்ஸ் பேக்டரி  சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், டி. ஷியாமளா தயாரிப்பில்,  சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், பொழுதுபோக்கு திரைப்படம் “ரைட்”.வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி  திரைக்கு வருகிறது. இத இசை வெளியீட்டு விழாவில் நட்டி நட்ராஜ் பேசியதாவது: “ரைட் ஒரு சுவாரஸ்யமான படம். ரமேஷ் என்னிடம் உதவியாளராக இருந்தவர், அவர் கதை சொன்ன போதே யார்யாரெல்லாம் நடிக்க  வேண்டும் என எழுதியே வைத்திருந்தார். அருண் பாண்டியன் சார் படத்தில் ஒரு இணை இயக்குநர் போல வேலை செய்தார். அவர் அர்ப்பணிப்பிற்கு நன்றி. அக்‌ஷரா ரெட்டி பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர், மிக கடுமையாக உழைத்துள்ளார், வாழ்த்துக்கள். யுவினா சிறப்பான நடிப்பை தந்துள்ளார். ஆதித்யாவும் சிறப்பாக செய்துள்ளார். ரோஷனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ரவிமரியா என் சிறந்த நண்பர் அவர் செய்த உதவிகள் ஏராளம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி.********

படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். குணா இசையில் வாழ்ந்துள்ளார். ஆர்ட் டைரக்டர் வேலை பெரியளவில் கண்டிப்பாக பேசப்படும். படத்தின் தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். அனைவரும் இப்படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். சமூக அக்கறை மிக்க ஒரு விசயத்தை ரமேஷ் சொல்லியுள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் பேசியதாவது..  எங்கள் படத்தில் பணிபுரிந்த நட்டி சார், அருண் பாண்டியன் சார் மற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்த உறவுகளுக்கு நட்புகளுக்கும் நன்றி. இயக்குநர் எனது நண்பர், இன்னொரு நண்பர் ஜெயபாண்டி சார். அவர் மூலம் தான் இந்தப்படம் நடந்தது.  சுப்பிரமணியன் படம் செய்ய வேண்டும் என்று சொன்ன போது மூவரும் இணைந்து செய்யலாம் என்று தான் படம் ஆரம்பித்தோம். அருண்பாண்டியன் சார் பல வழிகாட்டுதல்களை தந்தார். நட்டி சார் முழுக்க முழுக்க கூட இருந்து ஆதரவு தந்தார். இயக்குநர் ஜெயித்தால் எங்கள் ஊரே சந்தோசப்படும். அனைவரும் திரையரங்கு வந்து படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பாலசுப்பிரமணியம் ரமேஷ் பேசியதாவது..,  என் இயக்குநர்கள் குழுவிற்கு முதல் நன்றி. என் அம்மா அப்பா, எனக்கு தொழில் கற்றுத்தந்த குருக்களுக்கு நன்றி. எப்போதும் ஊரில் என் நண்பர்கள் எப்போது படம் செய்வாய் எனக் கேட்பார்கள், அதற்கு தயங்கியே நான் எங்கும் போகாமல் இருந்தேன். என் நண்பர் ஜெயபாண்டி தான் திருமால் சாரை அறிமுகப்படுத்தினார், இப்படத்தை தயாரித்ததற்கு திருமால் சாருக்கு நன்றி. நட்டி சார் ஆபிஸில் தான் நான் வாழ்ந்தேன். அவர் தான் நான் இப்படம் செய்யக் காரணம். இப்படம் ஒரே இடத்தில் நடக்கும் கதை நடிகர்களை ஸ்டேஜிங் செய்வது மிகுந்த சவாலாக இருந்தது. குணா மிக அற்புதமான இசையை தந்துள்ளார். தாமு சார் கலை இயக்கத்தில் அசத்தியுள்ளார். மார்க்கஸ் சார் இப்படத்திற்கு முழு சப்போர்ட்டாக இருந்தார். அக்‌ஷரா மிக கடுமையாக உழைத்தார். நன்றாக நடித்துள்ளார். வினோதினி மேடமுக்கு சொல்லித்தர அவசியமே இல்லை. யுவினா நன்றாக நடித்துள்ளார். ஆதித்யா நிறைய சப்போர்ட் செய்தார். அருண் பாண்டியன் சாரிடம் அன்பிற்கினியாள் படத்தில் நான் வேலை செய்தேன். அவரைப்பார்க்கவே ஆறு மாதம் ஆனது. அவர் என்னை வேண்டாம் என சொல்லத்தான் கதை கேட்கவே ஒப்புக்கொண்டார் ஆனால் அவர் கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார்.  அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்  தயாரிப்பு நிறுவனம் – RTS Film Factory தயாரிப்பாளர்கள் – திருமால் லட்சுமணன், T ஷியாமளா  எழுத்து, இயக்கம் – சுப்ரமணியன் ரமேஷ்குமார்  இசை – குணா பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு – M பத்மேஷ் எடிட்டிங் – நாகூரான் ராமசந்திரன் கலை – தாமு ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கில் நடனம் – ராதிகா மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)