தமிழர் தயாரித்த ‘சிட்டி ஆப் ட்ரீம்ஸ்’ ஹாலிவுட் திரைப்படம்

தென் தமிழகத்தின் கம்பம் பள்ளத்தாக்கில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒரு தொழிலதிபராக மிகப்பெரிய வெற்றியை கண்டவர் தமிழர் ரூஃபஸ் பார்க்கர். சிறுவயது முதல் திரைக்கலை உருவாக்கத்தின் மீதான தனியாத பற்றின் காரணமாக,  2014 -ல் அமெரிக்காவில் பி2 பிலிம்ஸ்  என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, ஸ்டார்வீ  என்கிற ஒரு ஹாரர் படத்தை தயாரித்து  அமெரிக்க ஹாலிவுட் திரை உலகில்  ஒரு வெற்றித் தயாரிப்பாளராக முத்திரை பதித்தார். இப்படம்  சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பாராட்டுகளை பெற்றது. ‘ஸ்டார்வீ’ திரைப்படம் தந்த வெற்றியை தொடர்ந்து, ‘வெல்ர்ட் நைட்ஸ் வித் எமிலி’ என்கிற திரைப்படத்தை தயாரித்தார்…இந்த திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை அடைய, அடுத்தடுத்து, ஸ்பைடர்மேன் திரைப்படம் மூலம் பிரபலமான ஆண்ட்ரூ கேர்பீல்ட் நடிப்பில் உருவான  ‘அண்டர் தி சில்வர் லேக்’.  திரைப்படம்…பின்னர்  ‘பிலின்ச்’ திரைப்படம் என ரூபஸ் பார்க்கரின்  உன்னதமான  திரைப் பயணம் மிக நிதானமாக பெரும் வெற்றிகளை நோக்கி பயணித்தது. இந்த பாராட்டுகளுக்கெல்லாம்  மகுடம்  வைத்தாற்போல், ‘சிட்டி ஆப் ட்ரீம்ஸ்’ திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூக அக்கறையை கருத்தில் கொண்டு, சமீபத்தில், இந்த திரைப்படம் ஆஸ்கர் அகாடமி லைப்ரரியில் சேர்க்கப் பட்டிருப்பது மிகவும் பெருமைக்குரிய செய்தி ஆகும்.*********

அமெரிக்காவில் இதுவரை 12 மில்லியன் புலம் பெயர் தொழிலாளர்கள் கடத்தப்பட்டு, அவர்கள் அனைவரும் ஆடைதயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சட்டத்திற்கு புறம்பாக உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாக்கப் படுவதை உண்மைக்கு வெகு நெருக்கமாக  சொல்லி வெற்றியடைந்திருக்கிறார்… அந்த கடத்தப்பட்ட  12 மில்லியன் குழந்தைகளில் ஒரு சிறுவனின்  உண்மைக் கதையைத்தான்    திரு. ரூஃபஸ் பார்க்கர் அவர்களின் CITY OF DREAMS எனும் இந்த  திரைப்படம்  அமெரிக்காவின் கருப்பு பக்கத்தை வெளிஉலகிற்கு பெரும் வலியாக உணர்த்தியிருக்கிறது…

இப்படி கடத்தப்பட்ட  புலம் பெயர் குழந்தை தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் மூலம், அமெரிக்கா முழுவதும்  நடந்துகொண்டிருந்த, ஆண்டுக்கு 50 மில்லியன் டாலர் வியாபார நெட்வொர்க்கின் பின்னணியை இந்த திரைப்படம் வெளிக் கொண்டுவந்ததிருக்கிறது…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல் ஹாலிவுட் நடிகர்களான சில்வெஸ்டர் ஸ்டெலோன் உள்ளிட்ட பலரின் பாராட்டுக்களை பெற்றிருக்கும் இந்த திரைப்படம், LIONS GATE எனும் பெரும் ஹாலிவுட் திரைப்பட வெளியீட்டு நிறுவனத்தின் மூலம், கடந்த  ஆகஸ்ட் மாதம் உள்நாட்டு வெளியீடாக மட்டும்  சுமார் ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டு அமெரிக்க மக்கள் மற்றும் ஊடகங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது….. அமெரிக்காவின் திரைப் பிரபலங்கள் சில்வஸ்டர் ஸ்டோலன், மெல் கிப்சன், டோனி ராபின்ஸ், மைக் டைசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தை இணைய தளங்கள் மூலமாக பாராட்டி பதிவிட்டுருப்பது  இந்த படத்தின் சமூக தாக்கத்திற்கு பெரும் சான்றாக உள்ளது…