சாய் பொன்னியம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் அ அய்யனாரப்பன் இயக்கத்தில், ஒரு அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அனல் மழை”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது. இந்நிகழ்வினில்..இயக்குனர் அய்யனாரப்பன், தயாரிப்பாளர் கே ராஜன், ஆர் கே அன்புசெல்வன், நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ் தங்கவேல், கதாநாயகி சுபாஷிணி, கதாநாயகன் அப்துல் ஷரீப், நடிகர் பிரதிப் செல்வராஜன், நடிகர் இயக்குனர் காதல் சுகுமாரன், தயாரிப்பாளர் மோகன், நடிகர் கூல் சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.****
“அனல் மழை” பட இசை வெளியீட்டு விழா
