கேரளா மாநிலம், மாவேலிக்கராவை சேர்ந்த டாக்டர்.ஜக்கிரியா பால் என்பவர் Central Travancore Specialist மருத்துவமனையை அபிவிருத்தி செய்ய வேண்டி பணம் கடன் பெற முயற்சி செய்த போது அறிமுகமான சென்னையைச் சேர்ந்த P.L.ஜெயராஜ் மற்றும் பெங்களூரை சேர்ந்த அஸ்வின் ராவ் ஆகியோர் கடன் பெற்று தருவதாக கூறி பணம் ரூ.45 கோடியை ஏமாற்றியதாக கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு, பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு-1 குழு 2 –ல் வழக்குப்பதிவு செய்து, ஆய்வாளர் திருமதி.மேனகா தலைமையில் தலைமைக் காவலர்கள் பன்னீர் செல்வம் (த.கா.21324), உமாசங்கர் (த.கா.26451) மற்றும் முதல்நிலை பெண் காவலர் திருமதி.வங்கிதா பானு (மு.கா.39768) ஆகியோர்அடங்கிய தனிப்படை தீவிர தேடுதலில் ஈடுபட்டு எதிரி P.L.ஜெயராஜ் என்பவரை கடந்த 06.07.2018 அன்று கைது செய்த நிலையில் மற்றொரு தலைமறைவு எதிரி அஸ்வின் ராவ் என்பவரை கடந்த 02.01.2021 அன்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கி வடிக்கையாளர்களுக்கு டிமேட் கணக்கு துவங் நியமிக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த முன்னாள் ஊழியர் ஹரிகுமார் என்பவர் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த முதியோர்களிடம் பேசி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து ஓய்வு ஊதியம், மற்றும் சேமிப்பு பணத்தை பெற்று ரூ.4 கோடி வரை பெற்று மோசடி செய்துள்ளார். இத குறித்து நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரண மேற்கொள்ளப்பட்டது.
EDF-2 காவல் ஆய்வாளர் திருமதி. ரேவதி தலைமையில் தலைமைக்காவலர்கள் திருமதி வெங்கடேஸ்வரி, (பெ.த.கா. 25096) சம்பத்குமார் (த.கா.31947) அன்புவிஜய், முதல் நிலை பெண்காவலர் திருமதி.கோமதி (51218) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் ஹரிகுமார், த/பெ.துரைக்கண்ணு என்பவரை கைது செய்த சிறையில் அடைத்தனர்.
3. இன்ஸ்யூரன்ஸ் பணத்தை பெற்று தருவதாக கூறி பணம் ரூ.2.06 கோடி ஏமாற்றிய கும்பல் கைது.
சென்னை மந்தைவெளியை சேர்ந்த சுதாஶ்ரீதரன் என்பவரிடம் இறந்து போன அவரின் கணவரின் இன்ஸ்யூரன்ஸ் பணத்தை பெற்று தருவதாக கூறி பணம் ரூ.2.06 கோடி ஏமாற்றியதாக மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்து, உதவி ஆணையாளர் தலைமையில் தலைமைக் காவலர் திரு.ஸ்டான்லி ஜோஸ் (த.கா.43311), முதல் நிலை பெண் காவலர்கள் ஆனந்தலஷ்மி (மு.பெ.கா.30945), ஷகிலா (மு.பெ.கா.50818) காவலர்கள் பாண்டியராஜன் (கா.51940), மற்றும் ஏழுமலை (கா.52113) ஆகியோர் அடங்கி தனிப்படை தீவிர தேடுதலில் ஈடுபட்டு எதிரிகள் அமன்பிரசாத், சிம்ரன்ஜித், அன்ஷிகா (எ) சிவானி சவுஹான் (எ) பிரியாசர்மா, அமித்குமார், அக்ஷத்குப்தா உட்பட 10 நபர்களை டெல்லியில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
4. பல்லாவரம் பகுதியில் காலிமனையை வைத்து லோன் பெற்று 1.6 கோடி மோசடி செய்த 2 நபர்கள் கைது.
சென்னை, பல்லாவரம் பகுதியில் வசிக்கும் பிரபாவதி, வ/45, க/பெ.திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமாக உள்ள 465 சதுர அடி நிலத்தின் மீது ரூ.1.6 கோடி கடன் பெற்று மோசடி செய்து ஏமாற்றியதாக பிரபாவதி கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்தியகுற்றப்பிரிவு EDF-3 வழக்கு பதிவு செய்து விசாரண மேற்கொள்ளப்பட்டது.
EDF-3 ஆய்வாளர் திருமதி.பாரதி உதவி ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், தலைமைக்காவலர் திரு.செந்தில்குமார் (26677) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.விநாயாக ஆச்சர்யா, வ/45, த/பெ.கிருஷ்ணமூர்த்தி, மடிப்பாக்கம், 2. ஜகுபர் அலி, வ/37, த/பெ.பீர்முகமது, எம்.கே.பி நகர், சென்னை ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
5. ஆன்லைன் சூதாட்டம் நடத்தி மோசடி செய்த நபர் கைது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் கொடுத்த புகாரில் , ஆன்லைனில் பெட்டிங்கிற்க ரூ.87 லட்சத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டனர்,
சென்னை மத்தியகுற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.வீரச்சாமி, உதவி ஆய்வாளர் திரு.பாஸ்கரன், தலைமைக்காவலர்கள் திரு.புல்லப்பன், (தா.கா.25518) ஜெயந்தன்(த.கா.28440) திரு.சிவா (26104) திருமதி.கற்பகலட்சுமி (பெ.த.கா.27645) மகேஷ், (த.கா.43849)முதல் நிலைக்காவலர் திருமதி.கலைபிரியா (மு.நி.கா47111) திருமதி.வெய்லா (பெ.மு.நி.கா30932) மற்றும் காவலர்கள் திரு.சரணவணன், (40894), நாகராஜன் (கா.51818) ஏழுமலை (52113) சிவகுமார் (கா.41072) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்த ஆன்லைன் சூதாட்ட புக்கிங் நடத்திய ஹரிகிருஷ்ணன் என்பவரை 12.10.2021 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்த 193 கிராம் தங்க நகைகள், ரொக்கம் , 24,68,300/- 6 கிலோ வெள்ளிப்பொருட்கள், 10 செல்போன்கள், 1 ஐபேட்,1 லேப்டாப் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற SBI வங்கி அதிகாரி திரு.கமலக்கண்ணன் என்பவருக்கு கடந்த 2016 ம் ஆண்டு அறிமுகமான மாதவரத்தை சேர்ந்த மதனகோபால் என்பவர் முன்னாள் துணை முதலமைச்சரர் திரு.பன்னீர்செல்வத்தின் சகோதரனின் மகன் என்றும் அதனடிப்படையில் தன்னால் அரசு வேலை வாங்கி தரமுடியும் எனக்கூறியதை நம்பி கமலக்கண்ணன் தனது மகள்களுக்கு வேலை வேண்டி ரூ.44,50,000/- மதனகோபாலிடம் கொடுத்துள்ளார். ஆனால் மதனகோபால் போலியான பணி நியமன ஆணையை கொடுத்து கமலக்கண்ணனை ஏமாற்றியுள்ளார். இது குறித்து கமலக்கண்ணன் மத்தியகுற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மத்தியகுற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. காலாராணி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுபாஷ்சந்திரபோஸ், தலைமலைக்காவலர்கள் திரு.சண்முகம் (த.கா.எண்.26801), திருமதி.வரலட்சுமி (த.கா.27686) முதல் நிலைக்காவலர் திரு.ரஜினி, (மு.நி.கா.47479), காவலர்கள் திரு.இளங்கோ (கா.49245) திரு.அபினேஷ் , செல்வி.ஆனந்தி (54898) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 04.10.2021 அன்று மதனகோபால், வ37, த/பெ.ஜெகதீசன், எண்.1/67, திருவள்ளூர் மாவட்டம் என்பவரை கைது செய்து சிறையில்அடைத்தனர்.
P-6கொடுங்கையூர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.V.வெற்றிவேந்தன் மற்றும் தலைமைக்காவலர் திரு.M.கணபதி (த.கா.28115) ஆகிய இருவரும் கடந்த 13.10.2021 அன்று இரவு 7.15 மணியளவில் கொடுங்கையூர் GNT ரோட்டில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வேகமாக வந்த TN 66 D-4981 என்ற பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்த போது, காரில் இருந்த ஆந்திரமாநிலம், நெல்லூரைச்சேர்ந்தஷேக்பயாஸ் மற்றும் ராஜஸ்தானைச்சேர்ந்த கோபால் ராம் ஆகிய இருவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் காரை சோதனை செய்த போது, காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரொக்கம் ரூ.1 ,54,50,000/- கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் பேரில் இருவரையும் பணம் மற்றும் காருடன் P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரியும் பெண்காவலர் தாமரைச்செல்வி (பெ.கா.எண்.54896) என்பவர் கடந்த 12.10.2021 அன்று மதியம் வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தின் 3வது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியிலிருந்த போது, ராயபுரத்தைச் சேர்ந்த ராஜன், வ/31, த/பெ.சம்பத் என்பவர் 1லிட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோலை எடுத்துக்கொண்டு காவல் ஆணையாளர் அலுவலகதிற்குள் உள்ளே நுழைந்துள்ளார். உடனே மேற்படி பெண்காவலர் தாமரைச்செல்வி கூச்சலிட அருகில் பணியிலிருந்த சென்னை பெருநகர பாதுகாப்பு காவல் போலீசார் விரைந்து செயல்பட்டு பெட்ரோல் கேனுடன் வந்த ராஜனை மடக்கிப்பிடித்து G-1 வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் விசாரணையில் ராஜன் வேலை செய்த தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ½ மாதங்களாக சம்பளம் தராததை கண்டித்து விரக்தியில் ராஜன் பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் வந்தது தெரியவந்தது.பணியிலிருந்த ஆயுதப்படை பெண்காவலர் தாமரைச்செல்வி விழிப்புடன்செயல்பட்டதால் அசாம்பவித சம்பவம் தடுக்கப்பட்டது.
பணியில் சிறப்பாக செயல்பட்ட மேற்படி 41 காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் அதிகாரிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (18.10.2021) நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ்வழங்கினார்.