போதை பொருட்களுக்கு எதிரான சைக்கிள் பேரணி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால், இ.கா.ப.,  உத்தரவின்பேரில் மேற்கொண்டு வரும் போதை பொருட்களுக்கு எதிரான குற்றத் தடுப்புநடவடிக்கையின் தொடர்ச்சியாக, இன்று (18.12.2021) மைலாப்பூர் துணை ஆணையாளர் திஷாமிட்டல், இ.கா.  காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்துகொண்ட போதைக்கெதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார். சைக்கிள் பேரணி, மைலாப்பூர், ஆர்.கே.சாலையில் தொடங்கி, காந்தி சாலை காமராஜர் சாலை வழியாக விவேகானந்தர் இல்லம் வரை சென்று திரும்பி சாந்தோம் லஸ் கார்னரில்சைக்கிள் பேரணி முடிவுற்றது.