சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்றவர்கள் கைது – ஆணையர் சங்கர் ஜியால் தீவிர நடவடிக்கை

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் போதைதடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள்மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள்கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள்தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில்தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களைகைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் 01.01.2022 முதல் 17.03.2022 வரையில், போதைதடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் 109 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 189 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 581 கிலோகஞ்சா, 10 கிலோ ஆஷிஷ், 964 கிராம் Methamphetamine, Amphetamine, 10 கிலோEphidrine ஆகிய போதை பொருட்கள், 8,672 நைட்ரவிட், டைடல் ஆகிய உடல்வலிநிவாரண மாத்திரைகள், 14 செல்போன்கள், மற்றும் 14 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லையில், மெத்தம்பட்டமைன் என்ற போதைப் பொருள் விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த 8 நபர்களை கைது செய்தனர். இவ்வழக்கில், ஆந்திர மாநிலம் ஓங்கோலில் உள்ள ஒருவீட்டில் மெத்தம்பெட்டமைன் தயாரித்து, சென்னைக்கு கடத்தி வந்து பல்வேறுஇடங்களில் விற்பனை செய்ததும தெரியவந்ததின்பேரில், காவல் குழுவினர் ஓங்கோல்சென்று மெத்தம்பெட்டமைன் தயாரிக்கும் ஆய்வகத்தை கண்டுபிடித்து, குற்றவாளிகளைகைது செய்துள்ளனர். மேற்படி வழக்கில் எதிரிகளிடமிருந்து 860 கிராம்மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்07.03.2022 அன்று நரேந்திரகுமார், வ/32, காமராஜர் நகர், கொருக்குப்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ Ephedrine போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.  

N-1 இராயபுரம் காவல் நிலைய ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் 13.01.2022 மாலை, இராயபுரம், பழைய NRT பாலம், ஶ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் பின்புறம் கஞ்சா வைத்திருந்த1.நெக்க ரமணன், வ/33, நர்சிபட்டிணம், விசாகப்பட்டிணம், ஆந்திர மாநிலம், 2.சத்யவதி, பெ/வ.32, ரேணிகுண்டா, விசாகப்பட்டிணம், ஆந்திர மாநிலம், 3.மூவேந்தன், வ/29, த/பெ.கருப்பசாமி, திருநின்ற நகர் 2வது தெரு, புழல், சென்னை, 4.சுப்பிரமணி, வ/42, த/பெ.முத்துவேல், விநாயகபுரம், தண்டையார்பேட்டை, சென்னை, 5.சூர்யா, வ/29, த/பெ.விஜயகுமார், பல்லவன் நகர் 1வது தெரு, புது வண்ணாரப்பேட்டை, சென்னை ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 160 கிலோ எடை கொண்ட கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், N-1 இராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் 30.01.2022 அன்று இராயபுரம் இரயில் நிலையம் அருகே கண்காணிப்பில்ஈடுபட்டு கஞ்சா வைத்திருந்த 1.தடிசெந்தில், வ/45, காசிமேடு 2.எராபில்லி, வ/32, கிழக்குகோதாவரி மாவட்டம், ஆந்திர மாநிலம் 3.ராஜுபாபு, வ/41, விசாகப்பட்டினம், ஆந்திரமாநிலம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 112 கிலோகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் கடந்த 03.01.2022 அன்று மின்ட் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்து, கஞ்சா வைத்திருந்த 1.மங்கராஜ், வ/32, விசாகபட்டினம், ஆந்திர மாநிலம் 2.சரண்ராஜ் (எ) சரண்குமார், வ/24, த/பெ.தடிசெந்தில், எண்.124, காசிபுரம், காசிமேடு, 3.நொண்டிலட்சுமி, வ/60, காசிமேடு, 4.கவிதா, வ/25, க/பெ.இளங்கோ, திருவொற்றியூர், சென்னை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 96 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது.

G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலானகீழ்பாக்கம் துணை ஆணையாளர் தனிப்படையினர் 06.3.2022 அன்று  கஞ்சாவைத்திருந்த 1.ஷேக் மொய்தீன் பாட்ஷா, வ/29, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரமாநிலம், 2.துர்கா பிரசாத், வ/30, ஆந்திர பிரதேசம் 3.லோகநாதன் துர்கா, வ/26, ஆந்திரபிரதேசம் ஆகிய மூவரை கைது செய்து 12 கிலோ கஞ்சா மற்றும்  07.03.2022 அன்றுஈச்சர் வேனில் கஞ்சா கடத்தி வந்த 1.பிரதீப்ராஜ், வ/29, பூந்தமல்லி, சென்னை 2.வரதராஜு, வ/36, விழுப்புரம் மாவட்டம் ஆகிய 2 நபர்களை கைது செய்து 62 ½ கிலோகஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஈச்சர் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் கடந்த 02.02.2022 அன்று கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள்வைத்திருந்த மோகன் (எ) மோகனசுந்தரம், வ/28, தண்டையார்பேட்டை, என்பவரைகைது செய்து, 200 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் 1,200 நைட்ரவிட் என்றஉடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 06.03.2022 ஆர்.கே.நகர், ஐஓசி பேருந்துநிறுத்தம் பின்புறம் அதிகளவு உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்னைக்காகவைத்திருந்த ஜாபர் சாதிக், வ/26, நேதாஜிநகர் 4வது தெரு, தண்டையார்பேட்டைஎன்பரை கைது செய்து, 1,101 நைட்ரோவிட் உடல் வலி நிவாரண மாத்திரைகள்பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று (17,03,2022) R-2 கோடம்பாக்கம் காவல் நிலையஎல்லையில் உடல்வலி நிவாரண மாத்திரைகளளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த1.கிஷோர், 2.கிஷோர்குமார், 3.பூங்குன்றன், 4.கோகுலன், 5.முத்துபாண்டி, 6.ராஜலஷ்மி (எ) மித்ரா ஆகியோரை கைது செய்து,  நைட்ரவிட், டைடல் உள்ளிட்ட 7.125 உடல்வலிநிவாரண மாத்திரைகள், 4,620 நைட்ரவிட் (Nitravet) மாத்திரைகள், 2,220 டைடல் (Tydol),145 UNWANTED KIT மாத்திரைகள், 140 ALPRASAFE மாத்திரைகள் என மொத்தம்7,125 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2 லேப்டாப், 1 ஐபேட், 9 செல்போன்கள், ரொக்கம் ரூ.4,41,300/- மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (17.03.2022) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா வைத்திருந்த செங்குன்றம், காந்திநகரைச் சேர்ந்த விஜயகுமார், வ/37 மற்றும்அழகுராஜா, வ/34, இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சாமற்றும் 1.25 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ Hashish பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவின்பேரில், போதை தடுப்புக்கான நடவடிக்கைதுரிதமாக மேற்கொண்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள், மாத்திரைகள் விற்பனை செய்யும் கும்பல் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். சென்னை பெருநகர காவல் குழுவினரின் கஞ்சா மற்றும்போதை பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் எனவும், இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.