பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்

பேருந்து படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த, சென்னை, பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,உத்தரவிட்டதின்பேரில், காவல்அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் உள்ள பள்ளிகள் மற்றும்கல்லூரிகளுக்கு நேரில் சென்று, மாணவர்களுக்கு பேருந்தின் படியில் தொங்கியபடி பயணம் செய்வதன்ஆபத்து குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக, கீழ்பாக்கம் காவல் மாவட்டம், G-1 வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் இன்று (25.03.2022) காலை, சூளை பேருந்து நிறுத்தம், டவ்டன்சிக்னல், ஜெர்மையா ரோடு, A.P.ரோடு, அஷ்டபுஜம் ரோடு ஆகிய பேருந்து நிறுத்தங்களில் கண்காணித்து, மாநகர பேருந்துகளில் படிகளில் நின்று கொண்டும், தொங்கியபடியும் பயணம் செய்த பள்ளிமாணவர்களை பிடித்து, அவர்களுக்கு காவல் குழுவினர் அறிவுரைகள் வழங்கினர்.


இது
போன்ற ஆபத்தான பயணங்களால் ஏற்படும் உயிரிழப்பு, கை, கால் அடிப்பட்டு உடல் ஊனம்உள்ளிட்ட ஆபத்துக்கள் நிகழக்கூடும் எனவும், எனவே இது போன்று பேருந்து படியில் தொங்கியபடிஆபத்தான பயணம் செய்வதும், ஓடிச் சென்று ஏறுவது போன்ற சாகசங்கள் செய்வதும் ஆபத்தைவிளைவிக்கும் எனவும், இந்தியாவின் எதிர்கால தலைமுறையாகிய மாணவர்கள் கல்வியில் கவனம்செலுத்தி, முன்னேற வேண்டும் எனவும் காவல் குழுவினரால் எடுத்துரைக்கப்பட்டதுமேலும், பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களின் பெற்றோரை வேப்பேரி காவல்நிலையம் வரவழைத்து, இது போன்ற ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளாதவாறு தங்களதுபிள்ளைகளுக்கு அறிவுறுத்தும்படியும், பிள்ளைகளை கண்காணிக்கும்படியும் பெற்றோருக்குஅறிவுரைகள் வழங்கி மாணவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்காவல் குழுவினரின் அறிவுரைகளை ஏற்று, பேருந்தின் படியில் பயணம் செய்யாமல், கல்வியில்கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.