திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரை மொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். இவரது அடுத்தப் படைப்பான ‘ரசவாதி – தி அல்கெமிஸ்ட்’, காதலை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் திரைப்படம் ஆகும். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என வெளியாகியுள்ள புதிய காணொளிக் காட்சியின்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் கார்த்தி, நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட திரையுலகில் உள்ள 6 முக்கிய நட்சத்திரங்களை இந்த முன்னோட்டக் காணொளி காட்சி கவர்ந்தது.********
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, பி. சக்திவேலன் தனித்துவமான நல்ல உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து விநியோகம் செய்து முன்னணி விநியோகஸ்தராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவர் விநியோகிக்கும் படங்கள் திரைப்பட ஆர்வலர்களுக்கு விருந்தாகவும் வர்த்தக வட்டாரங்களுக்கு லாபம்தருவதாகவும் உள்ளது. அவர் இப்போது ‘ரசவாதி – தி அல்கெமிஸ்ட்’ படத்தை தமிழ்நாடு முழுவதும் விநியோகம்செய்யவுள்ளார்.
இயக்குநர் சாந்தகுமார் கூறும்போது, ”கொடைக்கானலில் 30 வயதில் ஒரு சித்த மருத்துவர் அமைதியானவாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக்கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக இந்தமலைப் பகுதியில் வந்திறங்கும் புதிய பெண் ஒருத்தியை சந்திக்கிறார். கடந்த கால கஷ்டங்கள் அவருக்குதீரும்போது, அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கிறார். ஒட்டு மொத்தபடக்குழுவினரும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்து, மே10 ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உதவிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பி.சக்திவேலன் சாருக்கு எனதுநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
கொடைக்கானல், மதுரை, கடலுார், பழனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ரசவாதி என்பது கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் கண்முன் கொண்டு வரக்கூடிய விஷயம். கொடைக்கானலில் நிகழ்கால கதைநடக்கும். உறவுகளை மையமாக வைத்து காதல், கோபம், பழிவாங்கல், இழப்பு என பல்வேறு உணர்வுகளைபடம் கடந்து செல்கிறது.
இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல பரிச்சயமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் எஸ்.எஸ்.தமன் (இசை), சரவணன் இளவரசு மற்றும் சிவகுமார் (ஒளிப்பதிவு), வி.ஜே. சாபு ஜோசப் (எடிட்டிங்), சதீஷ் கிருஷ்ணன் (நடன அமைப்பு). சிவராஜ் (கலை), சேது (ஒலி எஃபெக்ட்ஸ்), எஸ்பிரேம் (நிர்வாகத் தயாரிப்பாளர்), யுகபாரதி (பாடல் வரிகள்), தபஸ் நாயக் (ஒலிக்கலவை), எம்.எஸ்.ஜெய சுதா(உரையாடல் பதிவாளர்), ஆக்ஷன் பிரகாஷ் (ஸ்டன்ட்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு), ஆனந்த் (ஸ்டில்ஸ்) மற்றும் பெருமாள் செல்வம், மற்றும் மினுசித்ராங்கனி. ஜே (ஆடைகள்).

