ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார்

இந்த 2022 புத்தாண்டின் முதல் வாரம், நம் இல்லங்கள் எல்லாம், ஒரு அட்டகாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தரவுள்ள இன்ப வெளிச்சத்தால், ஒளி வீச போகிறது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 2022 ஆண்டின் முதல் வெளியீடான “அன்பறிவு” திரைப்படம் உலகளாவிய வெளியீடாக ஜனவரி 7, 2022 முதல் Disney Plus Hotstar ப்ரத்யேகமாக வெளியாகிறது. இப்படத்தின் காட்சி துணுக்குகள் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த நிலையில், அனைவரும் 2022 ஆம் ஆண்டுக்கான தங்களது விருப்ப பட்டியலில் இந்தப் படத்தை தங்களின் முதல் தேர்வாகக் குறித்து வைத்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி, இப்படத்தில் திரைத்துறையின் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரது இசையமைப்பில், யுவன் ஷங்கர் ராஜா பாடிய “அரக்கியே” இசைப் பிரியர்களை மெய்சிலிர்க்க வைத்த அதேவேளையில், சந்தோஷ் நாராயணன் பாடிய பாடலான ‘ரெடி ஸ்டெடி போ’ என்ற ஆல்பத்தின் புதிய சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘அன்பறிவு’ திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தை G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர். இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி முதன்மை வேடத்தில் நடிக்க, ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களில் மாதேஷ் மாணிக்கம் (ஒளிப்பதிவு), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), எஸ்எஸ் மூர்த்தி (கலை), பிரதீப் தினேஷ் (ஸ்டன்ட்), பொன் பார்த்திபன் (உரையாடல்கள்), பூர்ணிமா ராமசாமி (ஆடை வடிவமைப்பாளர்), மற்றும் ஷெரீப். (நடன இயக்குனர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.