எட்வர்ட் தயாரிப்பில் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் எப்.ஜே., ஆய்ரா, மோனா பெட்ரி, சாந்தினி தமிழரசன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சாத்தான் தி டார்க்”. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இந்தியாவுக்கு வாணிப நோக்கத்தோடு வந்த கிறிஸ்துவர்களோடு சேர்ந்து, சாத்தானை வழிபடுகின்றவர்களும் இந்தியாவுக்குள் நுழைந்து விடுகிறார்கள். அவர்கள் கடவுளுக்கு எதிராக நடப்பதோடு மட்டுமல்லாமல் சாத்தானை வழிபட்டால் நினைத்தை காரியம் உடனே கைகூடும் என்ற ஒரு உணர்வை கிராம மக்களிடையே பரவச் செய்கிறார்கள். சாத்தானுக்கு மிகவும் பிடித்தமானது நரபலிதான் என்ற உணர்வையும் அந்த கிராம மக்களிடையே ஏற்படுத்துகிறார்கள். இப்படி சாத்தானை வழிபடும் மக்கள் தொடர்ந்து இன்றளவும் நடந்துவருவதாக இக்கதையில் சொல்கிறார் இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம். கதைப்படி சாத்த்கானை வழிபடும் கிராமவாசிகள் ஒருபுறமிருக்க, மறு புறத்தில் கடவுளை வழிபடும் மக்களும் இருக்கிறார்கள். ஆனாலும் சாத்தான் வழிபாட்டையே தூக்கிபிடித்திருக்கிறார் இயக்குநர். எப்.ஜே. கடவுளை நம்புகிறவர். கதாநாயகி ஆய்ராவின் அம்மா மோனா பெட்டரி சாத்தானின் பிடியில் சிக்கி தன் உடல் உறுப்புகளை தானே வெட்டி சாத்தானுக்கு ரத்த அபிஷேகம் செய்கிறார். அவரின் வீட்டுக்குள் இருக்கும் ஒரு பாட்டி என்ற பெயரில் உருவம் இல்லாமல் இருக்கும் சாத்தானை வெளியில் கொண்டுவந்து விடுகிறார் கடவுள் நம்பிக்கையுள்ள கதாநாயகன் எப்.ஜே. வெளியில்வந்த அந்த சாத்தான் என்னென்ன செய்கிறது என்பதுதான் கதை. ஆங்கிலப்படத்க்த்குக்கு இணையான ஒரு பேய் படத்தை உருவாக்கியிருக்கியுள்ளார் இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் படத்தின் முன்பாதி சற்று தொய்வாக சென்றாலும் பின்பாதியில்தான் பேயாட்டம் பலமாக ஆடுகிறது. இரு பெண்களுக்கு தாயான மோனா பெட்சரியை சாத்தான் ஆட்டிப்படைக்கும் காட்சியில், பிள்ளைகள பயப்படாமலிருக்க அவர் எடுத்துகொள்ளும் தவிப்பு மெச்சத்தகுந்தது. படம் முழுக்க நரபலி ரத்தம் அறுபட்ட மனித உறுப்புகள் ரத்தம் என வெள்ளித்திரை ரத்தக்கறையாக காட்சியளிக்கிறது. பேய் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் சரியாக தீனிபோடும். குழந்தைகளை இப்படத்திற்கு அழைத்துச் செல்லாமல் இருப்பது நல்லது. அச்சுறுத்தும் காட்சிகளால் திரையரங்கத்தை அதிரச் செய்திருக்கும் இசை அமைப்பாளர் அஸ்வின் கிருஷ்ணாதான் இப்படத்தின் உண்மையான கதாநாயகன். பார்வையாளர்களை இசையால் உறைய வைத்திருக்கிறார். அவருக்கு துணையாக இருந்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாலா ஜி ராமசாமி. உச்சக்கட்ட காட்சியில் கதாநாயகி ஆயிராவின் மூலம் சாத்தானின் இரண்டாம் பாகத்துக்கு கோடிட்டுள்ளார் இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம்.
“சாத்தான் தி டார்க்” திரைப்பட விமர்சனம்
