கோவை அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்கள் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.. கட்சியின் மாநில செயலாளர் ராஜா ஹூசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது;

கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.. நகர் அரசுப் பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவியிடம், அப்பள்ளி ஆசிரியர்கள் மதவெறுப்புடன் நடந்துகொண்ட செயல் கண்டிக்கத்தக்கது.

கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.. நகர் அரசுப் பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவியிடம், அப்பள்ளி ஆசிரியர்கள் அபிநயா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் மதவெறுப்புடன் நடந்துகொண்டுள்ளனர். மாட்டுக் கறி உண்பவர்களுக்கு திமிர் அதிகம் என்று சொல்லி அந்த மாணவியை வகுப்பில் உள்ள மாணவர்கள்முன்னிலையில் சிறுமைப்படுத்தி பேசி வந்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் தலைமையாசிரியரிடம் புகார்அளித்த பின்பும், குறிப்பிட்ட அந்த ஆசிரியர்களின் மதவெறுப்பு செயல்கள் அதிகமானதே தவிர குறையவில்லை. மாணவியை தொடர்ந்து டார்கெட் செய்தும், ஒருமையில் பேசியும், மாணவியின் புர்காவை கொண்டு ஷூவைதுடைக்கவும் வைத்துள்ளனர் அந்த மதவெறி ஆசிரியர்கள்.

மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களின் இத்தகையகீழ்த்தரமான செயல் கண்டிக்கத்தக்கது. ஆசிரியர் பணிக்கே தகுதியில்லாத இத்தகையவர்களைஅப்பணியிலிருந்தே நீக்க வேண்டும். தமிழக கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதோடு, வெறுப்பு குற்றத்திற்காக ஆசிரியர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்திட வேண்டும் எனவும் கேட்டு க்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.