“சூரகன்” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

தேடு ஐ சினி கிரியேஷன் சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில்,  புதுமையான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்சூரகன்”.  டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் வி. கார்த்திகேயன், சுபிக்‌ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கலைமாமணி ஶ்ரீதர், தியா, ஹாசினி பவித்ரா, தர்மா, விக்கி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.*******

இவ்விழாவில் இயக்குநர் சதீஷ் கீதா குமார்  பேசியதாவது..  இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் அனைவரும் மிக கடுமையாக வேலைபார்த்திருக்கிறார்கள். இது ஒரு ஆக்சன் படம் மணிக்கு சிறப்பு தேங்ஸ். வழக்கமாக ஆக்சன் காட்சிகளைநானே வடிவமைப்பேன் ஆனால் அதையெல்லாம் திரையில் கொண்டு வர மணி மிக கடினமாக உழைத்துள்ளார். சஸ்பெண்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்றமுயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்சனைகள் என்ன என்பது தான் படம். இந்த படத்தில் யாருக்கும் ஓய்வேதராமல் வேலை வாங்கியிருக்கிறேன் அதற்காக இப்போது நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கார்த்திகேயனும் நானும் நண்பர்கள். ரொம்ப காலமாக பேசித்தான் இந்தப்படத்தை உருவாக்கினோம். ஒருஆக்சன் படம் என்றாலும் கார்த்திகேயன் தற்காப்பு கலைகள் கற்றுக் கொண்டவர் என்பதால் ஈஸியாகஇருந்தது. டேஞ்சர் மணியும் ஆக்சன் நன்றாகப் புரிந்து கொண்டதால், இந்த படம் எளிதாக நடந்தது. அச்சுராஜாமணி கதை சொன்ன போதே உற்சாகமாக ஒப்புக்கொண்டு 4 பாடல்களை தந்துள்ளார். சுபிக்‌ஷா நல்லரோல் செய்துள்ளார். வின்சென்ட் அசோகன் வித்தியாசமான வில்லன் ரோல் செய்துள்ளார். படம் கண்டிப்பாகஉங்களுக்கு பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.