ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள்! – சீமான் சீற்றம்

நீங்கள் இடித்தது வீடுகளை மட்டுமல்ல; சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமென நம்பிக்கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை! இந்நாட்டின் இறையாண்மையை! பன்முகத்தன்மையை! மக்களின் ஒருமைப்பாட்டை! தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல; அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச்சாசனத்தையும்தான்! நேற்றைக்கு மசூதியை இடித்தீர்கள்! இன்றைக்கு வீடுகளை இடிக்கிறீர்கள்! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும் இன்றைக்குப் பேயாட்டமிடலாம்; வீடுகளை இடிக்கலாம்; வழக்குகளைத் தொடுக்கலாம்; மக்களை ஒடுக்கலாம். ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள் ஆட்சியாளர் பெருமக்களே! இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.