நடிகர் அர்ஜூன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “சீதா பயணம்”. இப்படத்த்கில் அர்ஜூன், அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன், நிரஞ்சன், துர்வா சர்ஜா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், கொவை சரளா, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சீதா பயணம்”. சத்யராஜின் ஒரே மகளான ஐஸ்வரியா அர்ஜூன் சமையல் கலைஞராக ஆகவேண்டும் என்பதே லட்சியம். அதற்காக ஹைதராபாத்தில் நடக்கும் ஒரு பயிற்சி முகாமில் கலந்து கொள்ள காரில் போகிறாள். வரும் வழியில் நிரஞ்சன் பயண இருக்கை உதவி கேட்க, மனிதாபிமானத்துடன் அவரையும் காரில் ஏற்றிக் கொள்கிறாள். செல்லும் வழியில் சிலரால் காலதாமதம் ஏற்பட்டுகிறது. காலதாமதத்துடன் சமையல்கலை பயிற்சி நிறுவனத்தின் வாசலுக்கு ஐஸ்வர்யா வந்ததும் பயிற்சி நடக்கும் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளேயிருந்த அனவரும் இறந்து போகிறார்கள். ரெண்டு நிமிடத்திற்கு முன்னால் வந்திருந்தால் விபத்தில் சிக்கி இறந்திருப்பேன. என்றும், தன்னை தாமதப்படுத்தியவர்களால்தான் உயிர் பிழைத்தேன் என்றும் கருதுகிறாள் ஐஸ்வர்யா. தாமதப்படுத்தியவர்களை நேரில் சென்று நன்றி தெரிவிக்க செல்கிறாள். அப்போது நடக்கும் சம்பவங்கள்தான் கதை. மனிதனின் நல்ல பண்புகளை சொல்கிற கெட்டவர்களுக்குள் இருந்தும் நல்ல உணர்வை வெளிவரச் செய்கிற பாங்கு அருமை. தெலுங்கு வாசனையோடு காட்சிகளை இயக்கி இருக்கிறார் அர்ஜுன் . அவர் நடித்திருக்கும் கவுரவத் தோற்றமும் அருமையாக உள்ளது. நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரங்களாகவே திரையில் வாழ்ந்திருக்கிறாற்கள். சத்யராஜ், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் அனுபவ நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. உச்சக்கட்ட காட்சியின் உணர்வுபூர்வமான நடிப்பில் ஐஸ்வரியாவும் நிரஞ்சனும் அசத்தியுள்ளார்கள். சில இடங்களில் பிஜேபி கட்சியின் ஊது குழலாக அர்ஜூன் காணப்படுகிறார். கதையின் முடிவை இடைவேளக்குப் பிறகு நகரும் ஒவ்வொரு காட்சியால் முன்கூட்டியே சரியாக யூகிக்க முடிகிறது.
“சீதா பயணம்” திரைப்பட விமர்சனம்
