சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர். குரு சரவணன், தற்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். சதீஷ் குமார், ஆக்‌ஷன் கலந்த முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் மற்றொரு கதாநாயகனாக ஆதி சாய் குமார், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அறிமுகமாகிறார். மனோஜ் பரமஹம்சா, படத்தின் வித்தியாசமான கதைக்களத்தால் கவரப்பட்டு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க, துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.*******

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் ஜி. சுரேஷ் தயாரிப்பில் குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.