ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் “டங்கி” படத்தை வெளியிடுகிறது

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஷாருக்கானின்டங்கிதிரைப்படத்திற்கான, விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளது  ஜவான்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு,  மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின்டங்கிதிரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு  விநியோக உரிமையை வாங்கியுள்ளது, ஸ்ரீ கோகுலம்மூவிஸ். இதில் ஷாருக்கான் அனைவரையும்  மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். ரெட்சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாராகி, இயக்குநர்ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் இப்படம் டிசம்பர் 21 முதல், திரையரங்குகளில் வெளியாகிறது.*******

 ட்ரீம் பிக் பிலிம்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில்டங்கிபடத்தின் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது. கிங் கான் ஷாருக்குடன் மீண்டுமொரு படத்தில் நாங்கள் இணைவதில்  பெருமிதம் கொள்கிறோம். மேலும்அவருடன் இன்னும் பல படங்கள் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறோம்ஷாருக்கான் நடித்தஜவான்படத்தை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விநியோகம் செய்துள்ளது ஸ்ரீ கோகுலம் மூவிஸ். ‘ஜவான்படத்திற்குபிறகுடங்கிபடத்தையும் விநியோகம் செய்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

2023  வது வருடம் ஷாருக்கானின் பிரமாண்டமான கம்பேக் வருடம் ஆக அமைந்துள்ளது. ஜனவரியில்பதான்‘, செப்டம்பரில்ஜவான்‘, தற்போது டிசம்பரில்டங்கி‘. பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம்கோச்சார் மற்றும் அனில் குரோவர் போன்ற பாலிவுட் திறமைகள் இணைந்துள்ளடங்கிஇதயம் வருடும்அழகான படமாக இருக்கும் என்பதை படத்தின் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ராஜ்குமார் ஹிரானி, கௌரிகான் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷிமற்றும் கனிகா தில்லானுடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி வசனம் எழுதியுள்ளார். மும்பை, ஜபல்பூர், காஷ்மீர், புடாபெஸ்ட், லண்டன், ஜெட்டா மற்றும் நியோம் என உலகின் பல  இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அமன் பந்த் பின்னணி இசையமைத்துள்ளார் மற்றும் ப்ரீதம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். CK.முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் ஆகியோர் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளனர்