முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.விஷ்ணு சந்திரன்,..., தலைமையேற்று முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் குழு உறுப்பினர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்வழங்கி தெரிவிக்கையில், சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள முஸ்லிம்மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் துவங்கப்பட்டு இச்சங்கத்தின் மூலம் பெறக்கூடிய நன்கொடை தொகைக்கு அரசு மானியம் 1: 2 விகிதத்தில் ஆண்டு ஒன்றிற்குஅதிகபட்சமாக ரூ.20 இலட்சம் வரை அரசால் வழங்கப்படுகிறது. இந்த நிதியின் மூலம் ஆதரவற்ற முஸ்லிம்விதவைகளுக்கு சுயதொழில் தொடங்கவும் மற்றும் மாதாந்திர உதவித் தொகை வழங்கிடவும் இச்சங்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி ஏழ்மை நிலையில் உள்ள முஸ்லிம் மகளிர்களுக்கு மருத்துவஉதவித் தொகை, திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, தையல் இயந்திரம் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் சிறுதொழில் தொடங்கிடவும் சங்கத்தின் நிதிக்கேற்ப தேர்வு செய்யப்பட்டபயனாளிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்படுகிறது. எனவே பங்களிப்புத் தொகை ஒரு மடங்கு என்றால் அரசுஇருமடங்கு நிதி வழங்குகிறது. எனவே சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெற்றிட வேண்டுமென மாவட்டஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,..., அவர்கள் தெரிவித்தார்.

பின்னர் 13 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்கிட ரூ.1,30,000த்திற்கான காசோலையினை மாவட்டஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,..., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  எம்.மாரிமுத்து மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கப்பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.