“பாம்” திரைப்பட விமர்சனம்

(தங்க முகையதீன்)

சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கிம் படம் “பாம்”. ஒரு கிராமத்க்த்தில் உயர் பிரிவினரும் தாழ்த்தப்பட்ட பிரிவினருமாக இரு பிரிவினர்கள் சண்டை சச்சர்வுகளுடன் வாழ்ந்து வருகிறர்கள். நீண்ட நெடுங்காலமாக அக்கிராமத்து மலைமீது அதிகாலை நேரத்தில் ஒரு மயில் கூவி முடித்ததும் ஒளி பிரகாசம் ஏற்படுகிறது. அந்த ஒளியை இருபிரிவினரும் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். ஒருநாள் திடீரென அம்மலையிலிருந்து ஒரு கல் உருண்டு வந்து அந்த கிராமத்தில் இரண்டு துண்டுகளாக வந்து விழுகிறது. அந்த இரண்டு  துண்டுக்கல்லையும் தெய்வமாக இருபிரிவுனர்களும்  வணங்க தொடங்குகிறார்கள். பெரிய துண்டுக்க்ல்லை உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த சிங்கம்புலியும் அவரது மக்களும் வணங்குகிறார்கள். சிறிய துண்டுக்கல்லை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிச்சா ரவியும் அவரது மக்களும் வணங்கும்போது இரு பிரிவனருக்குமிடையே தீண்டாமையின் காரணமாக சண்டை வெட்டுக்க்குத்து ஏற்படுகிறது. இவர்களுக்குள் ஒற்றுமை இல்லையே என்ற கவலையில் காளிவெங்கட் தினமும் குடித்துவிட்டு போதை தலைக்கேறி சாலையில் விழுந்துவிடுவார். அவரை தன் முதுகில் சுமந்துக்கொண்டு வீட்டில் படுக்கவைப்பதுதான் நாயகன் அர்ஜூன் தாஸின் வேலை. இதனால் காளிவெங்கட்டின் தங்கை ஷிவாத்மிகா அர்ஜூன் தாஸின் மீது காதல் கொள்கிறார். காளிவெங்கிட்டிற்கு ஒரு பழக்கமிருக்கிறது. அதாவது மலக்குடல் கழிவுக் காற்றை போதையில் இருக்கும்போது “டர் டர்” என்ற ஓலை வெடி சத்தத்துடன் வெளியேற்றுவார். ஒருநாள் காளிவெங்கட் இறந்து விடுகிறார். அவரை ஊருக்கு வெளியே வைக்க உயர்சாதியினரான சிங்கம்புலி தனது ஆட்களுடன் வந்து காளிவெங்கட்டின் பிணத்தை தூக்குகிறார்கள். அவர்களால் பிணத்தை அசைக்கக்கூட முடியவில்லை. ஆனால் அர்ஜூன் தாஸ் வந்ததும் பிணத்தை தூக்கி ஊருக்கு வெளியேயுள்ள மரத்தடியில் வைக்கச் சொல்கிறார்கள். அவரும் வழக்கம்போல் காளிவெங்கட்டின் பிணத்தை இலகுவாக தோளில் சுமந்து கொண்டு ஊருக்கு வெளியே பிணத்துக்கு மாலைபோட்டு நாற்காலியில் வைத்து விட்டு திரும்பும்போது, பிணத்திலிருந்து காளிவெங்கட்டின் மலக்குடல் கழிவுக்காற்று “டமார்” என்ற சத்தத்துடன் வெளியேறுகிறது. இதைக்கேட்டதும் ஊர் பூசாரி பிணத்தின் மீது சாமி இறங்கியிருக்கிறது என்று கூறுகிறார். அதனால் கிராமத்தின் இருபிரிவினரும் பிணத்தை வணங்க ஆரம்பித்து விடுகிறார்கள். பெரும் தலைவர்களின் பகுத்தறிவால் தீண்டாமையை ஒழிக்க முடியாமலிருக்கும் இக்காலக்கட்டத்தில், ஆன்மீகத்தை வைத்து தீண்டாமைக்கு வேட்டு வைத்த இயக்குநரை பாராட்டாமலிருக்கமுடியாது. ஆன்மீகத்தின் வாயிலாகத்தான் தீண்டாமை தலைதூக்கியது. ஆனால் அதே ஆன்மீகத்தை ஆயுதமாக்கி தீண்டாமை வேரை அறுத்தெறிந்திருக்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட். (அதுவும் கழிவுக்காற்றை வெளியேற்றி). அர்ஜூன் தாஸ் கதாபாத்திரத்துக்குள் கரைந்தே போய்விட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். காளிவெங்கட்டின் பிணம்கூட நடிக்கிறது. அப்படியொரு நடிப்பை தந்துள்ளார். ஷிவாத்மிகா உயரமும் உடற்கட்டும. ரசிகர்களின் கண்களை அகல விரிக்கச் செய்கிறது. ஆட்சியாளராக வரும் அபிராமி இருபிரிவினருக்குமிடையே சமரசம் ஏற்பட முயற்சிக்கும் காட்சியில் ஆசிரியையாக அவதரித்திருக்கிறார். பாலசரவணன், சிங்கம் புலி, கிச்சா ரவி, டி எஸ் கே ஆகியோர் மண்ணின் மைந்தர்களாகவே மாறியிருந்தார்கள். படத்தின் ஓட்டத்திற்கு டி. இமானின் இசை பக்கபலமாக இசைந்திருந்தது. கதாசிரியர் மணிகண்டனின் சிந்தனை ஆகச் சிறந்த்து. படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது இயக்குநர் விஷால் வெங்கட்டுடன் கைகுலுக்க தோன்றும்.