*விமல் – நட்டி இணையும் ‘வடம்’ திரைப்படம்

தமிழ்நாட்டின் கிராமப்புறத்தின் உணர்ச்சிகரமான பின்னணியில் அமைந்துள்ள ‘வடம்’, மஞ்சு விரட்டின் பாரம்பரியத்தையும், பரபரப்பையும் இதுவரை இல்லாத அளவில் பதிவு செய்கிறது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவ்உலகில், ஒவ்வொரு சவாலும் உணர்ச்சிபூர்வமானது, ஒவ்வொரு வெற்றியும் பாரம்பரியத்தின் பாரத்தை சுமக்கிறது. பாண்டிமுனி மற்றும் வெற்றியின் பயணம், வெறுமனே பார்வையாளர்கள் பார்ப்பதற்காக மட்டும் அல்ல அது ஒரு அனுபவத்தை கொடுக்கும் ஓர் உண்மையான அண்டர்டாக் கதையாக விரிகிறது. விமல், நட்ராஜ் சுப்பிரமணியம் (நட்டி), பாலசரவணன், சனஷ்கா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் கேந்திரன் இயக்கியுள்ளார். டி. இமான் இசையமைப்பில், உணர்ச்சி, உற்சாகம் மற்றும் கலாச்சார ஆழம் இணைந்துள்ளன.******

விமல் கூறுகையில்: “இந்தப் படத்தில் காளையுடன், குறிப்பாக பாண்டிமுனியுடன் பணியாற்றியது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். காலப்போக்கில் உண்மையான ஒரு பந்தம் உருவானது — அது நடிப்பு அல்ல, வாழ்ந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. இந்தப் படம் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமானது.”

இயக்குனர் கேந்திரன் கூறுகையில்: “‘வடம்’ உருவாக்கத்தின் நோக்கம், நமது கலாச்சாரத்தின் வேர்களை உண்மையாகச் சொல்லி, அதன் உணர்ச்சி பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகும். நடிகர்களையும் காளையையும் அந்த அளவிற்கு தயார்ப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதுவே இந்தப் படத்தின் தனித்தன்மை.” நட்டி கூறுகையில்: “‘வடம்’ எனக்கு மிகவும் நெருக்கமான படம். இது நமது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் ஒரு அனுபவம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்போது சன் NXT மூலம் இதைப் பார்க்க முடிவது மகிழ்ச்சியான விஷயம்.”