“ரிவால்வர் ரீட்டா” திரைப்பட விமர்சனம்

சுதன் சுந்தரம், ஜெகஹீஷ் பழனிச்சாமி தயாரிப்பில் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்கிமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் ஷோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கத்கிரவன், சென்ட்ராயன், அகஸ்டின், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரிவால்வர் ரீட்டா”. பாண்டிச்சேரியில் தந்தையை இழந்த கீர்த்தி சுரேஷ் தனத. தாய் ராதிகா சரத்குமார் மற்றும் அக்காள் அக்காவின் குழந்தை ஆகியோருன் வாழ்ந்து வருகிறார். தனது வீட்டில் அக்காவின் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, பாண்டிச்சேரியில் பயங்கரமான ரவுடியாக இருக்கும் சூப்பர் சுப்பராயன் குடிபோதையில் கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து கலாட்ட செய்கிறார். அவரை கீர்த்தி சுரேசும், ராதிகாவும் அடித்து கீழே தள்ளிவிடுகிறார்கள். போதையில் அடிவாங்கி கீழுந்த சுப்பராயன் இறந்துவிடுகிறார். இறந்த சுப்பராயனின் உடலை எப்படி வேளியேற்றுவது என்று கீர்த்தி சுரேஷ் திட்டம்போடுகிறார் . அதே வேளையில் சூப்பர் சுப்பராயனின் உள்ளூர் எதிரி பிணத்தை கைப்பற்ற திட்டமிடுகிறார். வீட்டுக்கு திரும்பிவராத தந்தை சூப்பர் சுப்பராயனைத் தேடி. அவரது மகன் சுனில் பல இடங்களில் திரிகிறார். முடிவில் பிணத்தை கீர்த்தி சுரேஷ் வெளியேற்றினாரா? அப்பிணத்தை எதிரி கைப்பற்றினாரா? இல்லையா? தந்தையை தேடி அழைந்த சுனில் என்ன ஆனார் என்பதுதான் கதை. கீர்த்தி சுரேஷ் முழுப்படம் முழுவதும் கதாநாயகியாக தனித்துவத்துடன் நடித்திருக்கிறார்.  எத்தனை பிரச்சனைகளையும் எளிதாக சமாளித்து   உடனே உடனே முடிவு எடுப்பது என கீர்த்தி தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். கீர்த்தி தாண்டி ராதிகா தன் கதபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், எத்க்தனை  பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளித்து எதிர்கொள்ளும் விதம்  ரசிக்க வைக்கிறது. ராதிகாவின் வெகுளித்தனமான நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.  ‘சுடுங்க மாப்பிள்ளை’ என்று கத்தும் காட்சியில் தியேட்டரும் சேர்ந்தே சிரிப்பலைகளில் ஆர்ப்பரிக்கிறது.   இவர்கள் தவிர சென்ட்ராயன், அகஸ்டின் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்திதை மெருகூட்டி நடித்திருக்கிறார்கள்.