“ஜின்” திரைப்பட விமர்சனம்

டி.ஆர்.பாலா தயாரித்து இயக்கியிருக்கும் படம் “ஜின்”. இபடத்தில் முகேன் ராவ், பவ்யா திர்ஹா, இமாம் அண்ணாச்சி, வைவுக்கரசி, பாலசரவணன், ராதாரவி, நிழல்கள் ரவி, விநோதினி, ரிதிவிக் ஆகியோர் நடித்துள்ளார்கள். முகேன் ராவ் மலேசியாவிலுள்ள ஒரு  நடச்திர விடுதியில் மாலை நேரத்து பாடகராக் 5 வருட ஒப்பந்தத்தில் பணியாற்றுகிறார். ஒப்பந்த காலம் முடிவுற்றவுடன் சென்னைக்கு திரும்புகிறார். பொதுவாக ஊருக்கு திரும்பும்போது வீட்டிலுள்ளவர்களுக்கு சில் பொருட்களையும், குழந்தைகளுக்கு மிட்டாய்களும், நண்பர்களுக்கு மது பாட்டில்களும் வாங்கி வருவார்கள். ஆனால் கதாநாயன் முகேன் ராவ், பழங்காலப் பொருட்களை விற்கும் ஒரு சீனக் கடையிலிருந்து ஒரு ஜின்னை (மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் இருப்பதுபோல், கண்ணுக்கு தெரியாத நல்லது கெட்டதுகளை செய்யக்கூடிய இறைவனால் படைக்கப்பட்ட  ஒரு இனம்). வாங்கி வருகிறார். ஜின் இருக்கும் பெட்டிக்குள் இரவு 12 மணிக்கு மேல் அது சாப்பிடுவதற்கு பிஸ்கட்டும் பாலும் வைத்து வளர்த்து வருகிறார். அதனால் இரண்டு மூன்று நல்ல காரியங்கள் முகேனுக்கு நடக்கிறது. ஆனால் முகேனின் அப்பா இமாம் அண்ணாச்சி, அம்மா வடிவுக்கரசி, அக்கா விநோதினி ஆகியோர் ஜின்னை பேய் என்று நினைத்து பயப்படுகிறார்கள். ஒருநாள் முகேனின் மனைவி பவ்யா கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஜின் இருக்கும் பெட்டிக்கு அருகில் மயங்கி கிடக்கிறாள். தனது மனைவியை ஜின்தான் கொலை செய்ய முயற்சித்திருக்கிறது என்று நினைத்து ஜின் இருக்கும் பெட்டியை தெருவில் வீசிவிடுகிறார் முகேன். உண்மையில் பவ்யாவ கொலை செய்ய முயற்சி செய்தது யார்? எதற்காக?. வெளியே வீசிய ஜின் என்னானது? என்பதுதான் மீதிக்கதை. கே.ஆர்.விஜயாவை புன்னகையரசி என்றழைப்பதுபோல இனி முகேனை புன்னகை மன்னன் என்றழைக்கலாம். அந்தளவுவுக்கு அழகாக புன்னகக்கிறார். கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் முகபாவனை மாற்றி அசத்துகிறார் முகேன். காதலிப்பதற்கும் கல்யாணத்துக்கும் கோமாவில் படுப்பதற்கும் கதைக்கு ஒரு நடிகை தேவையென்பதால் அதை இயக்குநர் பவ்யாவுக்கு கொடுத்திருக்கிறார் அவ்வளவுதான். கதாபாத்திரத்திற்கேற்ப உடல்மொழியை மாற்றிக் கொள்ள பவ்யா கற்றுக் கொள்ள வேண்டும். நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட இமாம் அண்ணாச்சி குணச்சித்திர நடிகராக திரையில் காட்சியளிக்கிறார். ஊற்றிய பாத்திரத்திற்கேற்ப தண்ணீர் தன் உருவத்தை மாற்றிக் கொள்வதைப் போல் வடிவுக்கரசி தன் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள் கைதேர்ந்தவர். அதை அழகாக கையாண்டிருக்கிறார் வடிவுக்கரசி. வயோதிகத்திலும் வில்லத்தனம் செய்ய முடியும் என்பதை ராதாரவி இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். ஜின் பேய் அல்ல. மனிதர்களைவிட பல்லாயிரம் மடங்கு சக்தி பெற்ற இறைவனால் படைக்கப்பட்ட ஒரு இனம் என்பதை இயக்குநர் அறிந்து படத்தை தயாரித்து இயக்கியிருக்கும் டி.ஆர்.பாலா பாராட்டுகுரியவர்