நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு கதாநாயகன் உருவாகிறார்

சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் இரண்டாவது மகன் தர்சன் கணேசன் நடிக்க வருகிறார்.  ஏற்கனவே மூத்தவர் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவரும் தெரிந்தது. அவருக்கு அடுத்தவர் தர்சன் கணேசனும் நடிக்க வருகிறார். பூனேயில் நடிப்பு பயிற்சி எழுத்துக் கொண்டு , தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்கள் அரங்கேற்றி விட்டு தகுந்த பயிற்சியுடன் உள்ளார். அவருக்கு பல கம்பெனிகள் அழைப்பு விடுத்துள்ளார்கள். விரைவில் முறைப்படி அவர்கள் அறிவிப்பார்கள் என தெரிகிறது. தாத்தா போலவே தெருக் கூத்து நாடகத்தில் நடித்து, அன்னை இல்லத்திலிருந்து மீண்டும் ஒரு நடிகர் உருவாகிறார்.****