மார்ச் 6ல் திரையரங்கிற்கு வருகிறார் ‘முஸ்தபா முஸ்தபா’

தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ’முஸ்தபா முஸ்தபா’. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசியதாவது, “’முஸ்தபா முஸ்தபா’ ஜாலியான ஒரு படமாக இருக்கும். முஸ்தபா முஸ்தபா என்றாலே நமக்கு எல்லாம் நட்பு பாடல்தான் நியாபகம் வரும். அதனை மனதில் கொண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தில் கதை அமைத்திருக்கிறோம். *********

அதனால், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஜாலியாக மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். பல பெரிய படங்களை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது. தொடர்ந்து என்னுடன் மூன்று படங்கள் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜோன்ஸ் அவர்களுக்கு நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஆணும் பெண்ணும் சமமல்ல. பெண்கள் ஆண்களை விட உயரத்தில் உள்ளனர். பெண்கள் தெய்வத்திற்கு சமம். அதனால், யார் குடித்தாலும் தவறுதான். நான் என் வாழ்க்கையில் இதுவரை சிகரெட், மது தொட்டதில்லை. இதை பெருமைக்காக சொல்லவில்லை. நான் சொன்னதை கேட்டு நாலு பேர் குடிக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தை கைவிட்டால் சந்தோஷப்படுவேன்” என்றார்.