தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க புதுடில்லியில் 19.05.2022 அன்று ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன்ரெட்டியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார்.ராமேஸ்வரம் திட்டத்தை பரிசீலித்து, பிரஷாத் திட்டத்தின் கீழ் ரூ.49.70 கோடியில்கொள்கை ரீதியில் ஒப்புதல் வழங்கியதற்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுற்றுலா அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, சுற்றுலாத் துறையானது CRZ அனுமதிகள் மற்றும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்க தேவையான பிறஅனுமதிகளைப் ஒன்றிய அரசிடம் பெறுவதற்கான செயல்பாட்டில் உள்ளது என்பதைஇந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.  இந்தியாவில் நிலையான மற்றும் சூழியல் சுற்றுலா தலங்களைமேம்படுத்துவதற்கான 2.0 திட்டத்திற்கான வழிக்காட்டுதல்கள் பெறப்பட்டுள்ளன பல்வேறுசுற்றுலா தலங்களின் சுற்றுலா வளங்கள் அடிப்படையில் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வருகைபுரிந்துள்ள உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 1153.36 லட்சமாவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்வருகை 0.57 இலட்சமாகவும் கணக்கிடப்பட்டுள்ளதுசுற்றுலா பயணிகளின் வருகையில் தமிழகம் முன்னனி மாநிலங்களில் ஒன்றாகவிளங்குவதால் பிரசாத் திட்டத்தின் கீழ் அதிக சுற்றுலா தலங்களை மேம்படுத்த கோரியுள்ளார்கள். கோவில் நகரமான திருவண்ணாமலையை பிரசாத் திட்டத்தின் கீழ்ஆரம்ப திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு ஒப்புதலும் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதுஇந்தியாவின் 17 தனித்துவமாக விளங்கும் சுற்றுலா தலங்களில் ஒன்றானமாமல்லபுத்தினை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கு    ரூ.461.22 கோடி மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரசாத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் அனைத்து பணிகளும்நிறைவுபெற்றுள்ளன. இங்கு கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட ரூ.82.86 இலட்சம் ஒதுக்கீடுசெய்ய கோரப்பட்டுள்ளதுமேலும், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் கடற்கரை சுற்றுலா சுற்றுகளில்தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தலங்களிலும் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது இத்திட்டத்தில் மொத்த மதிப்பீட்டில் 5 சதவீத தொகையான நிதி ஒப்பளிப்பு செய்யவழியுறுத்தப்பட்டது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் மாமல்லபுரம் அர்சுனன்தபசு பாறையில் முப்பரிமான லேசர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஒலி ஒளிக்காட்சி அமைப்பதற்கு கொள்கை அளவிளான ஒப்புதல் வழங்க கோரப்பட்டது. 75வது சுதந்திர இந்தியாவின் பெருமையை போற்றும் வகையில் அமுதபெருவிழாவின் போது 75 பாரம்பரிய மற்றும் கலாச்சார தலங்களின் காணொளிக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களைசமூக மற்றும் மின்னனு ஊடகங்கள் மூலமாக பிரபலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறையின் நினைவுச்சின்னங்களின் குறும்படங்களை எடுப்பதற்கான அனுமதி வழங்கும் நெறிமுறைகளை எளிதாக்கும் படிகேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வில் சுற்றுலா, கலை பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் சந்தரமோகன்.B இ.ஆ.ப., மற்றும் சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப்நந்தூரி இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.