ரூ.120 கோடிக்கு “டாக்ஸிக்” திரைப்படம் ஒப்பந்தம்

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா  விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில், ரூ.120 கோடி செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது.*****

டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான KVN Productions மற்றும் Monster Mind Creations ஆகியவற்றுக்கும், SVC-க்கும் இடையே ஏற்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம், இந்தப் படத்தின் மீது திரைத்துறை வைத்திருக்கும் அளவிட முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. AP–TG உரிமைக்காக மூன்று முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டியில் ஈடுபட்ட நிலையில், இறுதியில் SVC வெற்றி பெற்று, சமீபத்திய இந்திய சினிமாவின் மிக முக்கியமான விநியோக ஒப்பந்தங்களில் ஒன்றை உறுதி செய்துள்ளது.