நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான ஆக்ஷன் அவதாரத்தை வெளிக்காட்டிய பதாகை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். யுனிபார்முலா பிலிம்ஸ் இந்தப் படத்தை மிகப்பெரிய இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார்.********
. தெலுங்கில்: இயக்குநர் ஹனு ராகவபுடி தமிழில்: “குபேரா” படத்தில் நடித்த சக நடிகர் தனுஷ் இந்தியில்: “சாவா” பட நாயகன் விக்கி கௌஷல் மலையாளம் மற்றும் கன்னடத்தில்: துல்கர் சல்மான் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இந்த போஸ்டர்களை வெளியிட்டனர். மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு பாரம்பரிய புடவையில், பழங்குடி நகைகள் மற்றும் மூக்குத்தியுடன் காட்சியளிக்கும் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தோற்றத்தில் முற்றிலும் புதிய மற்றும் பயமுறுத்தும் முகபாவனையுடன் காட்சியளிக்கிறார். ரத்தம் சிந்திய தோற்றமும், கைப்பிடியில் பிடித்து வைத்திருக்கும் மர்மப் பொருளும், கதையின் மிரட்டலான தருணங்களை நமக்கு முன்வைக்கின்றன.
இயக்குநர் ரவீந்திர புள்ளே படம் குறித்து கூறியதாவது…. “மைசா இரண்டு வருடங்கள் உழைத்து உருவாக்கிய திரைப்படம். இப்படத்தின் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளோம், கதை, கதாபாத்திரங்கள், கலை நுணுக்கம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும். இப்போது, இந்தக் கதையை உலகிற்கு சொல்லத் தயாராக இருக்கிறோம்.” கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட மிகவும் உணர்ச்சிகரமான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் இது. இப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம்…, “மன உறுதியுடன் பெரும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட படம் இது. இது அவளின் கதை, அவள் கர்ஜிக்கிறாள். அதைக் கேட்க வேண்டாம், ஆனால் பயப்பட வேண்டும்…. @IamRashmika தனது மிரட்டலான அவதாரத்தில் #MYSAA ஆக அசத்தியுள்ளார்” என்று பதிவிட்டுள்ளது இப்படத்தின் முக்கிய தொழில்நுட்பக் குழுவினரை பற்றிய விவரங்களை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
திரைப்படக்குழு: நடிகை: ராஷ்மிகா மந்தனா இயக்குநர், எழுத்தாளர்: ரவீந்திர புள்ளே தயாரிப்பாளர்கள்: அஜய் & அனில் சாய்யபுரெட்டி இணை தயாரிப்பாளர்: சாய் கோபா தயாரிப்பு நிறுவனம்: Unformula Films மக்கள் தொடர்பு: சதீஷ்குமார், S2 Media