“போகி” திரைப்பட விமர்சனம்

வி.ஐ.குளோபல் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜயசேகரன் இயக்கத்தில், நபிநந்தி, சுவாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், மற்றும் எம்.எஸ். பாஸ்கர், சரத் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “போகி” இணையதளம் நடத்தும் ஒரு கும்பல் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வருகிறார்கள். தங்களது இணையதளத்தின் பார்வையாளர்கள் குறைந்து கொண்டே வருவதால் புதிய முறையில் பதிவேற்றங்களை பதிவிட ஆலோசிக்கிறார்கள். பாலியலை புதிய கோணத்தில் பதிவேற்ற முடிவு செய்யப்படுகிறது. அதன்படி, இணையதள மோகத்தில் சிக்கிக் கொள்ளும் இளம் பெண்களின் நிழற்படத்தை நவீன தொழில்நுட்பத்துடன் ஆபாசமாகவும் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் வீடுகளிலுள்ள படுக்கையறை மற்றும் குளியலறைகளில் ரகசிய கேமிராக்களை பொறுத்தி அவர்களின் செயல்பாடுகளையும் நிர்வாண உடற்கூறுகளையும் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு பார்வையாளர்களை அதிகரிக்க வைக்கிறார்கள். இதை தெரிந்து கொண்ட நபிநந்தி இணையதள கும்பலை என்ன செய்தார் என்பதுதான் கதை. இப்படத்தை சமூக அக்கறையுடன் ஒயக்கியிருக்கிறார் இயக்குநர் விஜயசேகரன். இளம் பெண்கள் முதல் முதியவர்கள்வரை இணையதளத்திலேயே மூழ்கி கிடக்காமல் தங்களின் உயிரையும் அதைவிட மேலான மானத்தையும் காப்பாறிக் கொள்ளவேண்டும் என்று இப்படத்தின் முலம் அறிவிக்கிறார். பாலியலின் அடுத்தகட்டமாக பிணத்தோடும் பாலியல் செய்யும் மனிதர்களின் வக்கிரபுத்தியையும் காட்டி இளம்பெண்கள் உஷாராக இருக்கவேண்டும் என்பதை திரையில் பாடம் நடத்திய்ள்ள இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது. நபி நந்தி அறிமுக நடிகராக இல்லாம்ல் அனுபவமிக்க நடிகராக நடித்திருக்கிறார். சுவாசிகா பழங்குடி இன பெண்ணாக நடித்து பெண்களின் மன போராட்டங்களை தனது நடிப்பு மூலம் வெளிப்படுத்தி பார்வையாளர்களை மிரள வைக்கிறார். உச்சக்கட்ட காட்சியில் மனிதர்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மனிதன் இல்லை என்பதை தைரிமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மெச்சத்தகுந்தவர்