வேலம்மாள் பள்ளித் துணைத் தலைமை ஆசிரியருக்குச் ” சிறந்த ஆசிரியர்” விருது

இந்து கல்வி மற்றும் நற்பணி மன்றமும்  சர்வதேச லயன்ஸ் கிளப்பும் இணைந்து டாக்டர். ராதாகிருஷ்ணனின் நினைவாக  செப்டம்பர் 5 அன்று ஏற்பாடு செய்த விழாவில் பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயாவின் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி. ஜெ.ராதிகாவுக்கு ‘சிறந்த ஆசிரியர் விருது’ வழங்கப்பட்டது. திருமதி .ராதிகா கல்வித்துறையில்
 தனது உன்னதமான பங்களிப்பிற்காகவும்  நேர்மையான அர்ப்பணிப்புக்காகவும் இந்த விருது வழங்கிப் பாராட்டப்பட்டார். அவருடைய முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான முயற்சியை இந்த விருது அங்கீகரிக்கிறது. ஆசிரியர் திருமதி  ஜெ.ராதிகா அவர்களின் முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் குறிப்பிடத்தக்க
இச் சாதனையைப் பள்ளி நிர்வாகம் முழு மனதுடன் பாராட்டுகிறது.