சந்தோஷமே பெரிய சம்பாத்தியம் – தகடூர் வெங்கட்

அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாம் அகமகிழ்வை அனுதினமும் அனுபவி. தகடூர் நண்பர் ஆறுமுகம் அவர்களின் அன்பு பேரன் வித்யூத்தின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஞாயிறு அன்று தர்மபுரியில் நடந்தது. குதூகலமாய் நடந்தது குடும்பவிழா. நண்பர்கள் புடைசூழ வந்திருந்தனர். கலகலப்பை காணிக்கையாக்கி மகிழ்ந்தனர். நாம் எப்போதும் கெத்தாக இருக்க வேண்டும் என்றால் சுவை இருக்கிறதோ இல்லையோ சாப்பாடு சத்தாக இருக்க வேண்டும்.
சத்தும் சுவையும் ஒருசேர சாப்பாடு ஆரோக்கியமாய் அருமையாய் இருந்தது. சிவாஜி ரசிகன் தகடூர் வெங்கட் நிகழ்ச்சி நெறியாளராய் இருந்து தனக்கே உரிய பாணியில் நிகழ்சியை வழிநடத்தினார். நான் தன்னந்தனி காட்டு ராஜா என் தோட்டத்தில் எத்தனை ரோஜா என்ற சிவாஜி பாடலுக்கு குழந்தைகளோடு சேர்ந்து ஒரு ஆட்டமும் போட்டார். அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்று பள்ளிப்பருவ
நினைவலைகளில் நண்பர்கள் நீந்தி மகிழ்ந்தனர். இது வெயிற்காலம். சுட்டெரிக்கும் வெயிலிலும் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு எல்லோருடைய மனங்களிலும் அன்பை அடை மழையாக அடிக்கவே செய்தது. அடுத்த நிகழ்வு எப்போது என்று மனம் கேட்கவே செய்தது.