குரோம்பேட்டை 24வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நிகழவு

இன்று காலை 7 மணி அளவில் தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட ராதா நகர் பஞ்சாயத்து காலனி வாட்டர் டேங்க் அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நமது சட்டமன்ற உறுப்பினர் திருமிகு இ.கருணாநிதி MLA அவர்கள் அடிக்கல் நாட்டினார் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மண்டல குழு தலைவர் திரு ஜோசப் அண்ணாதுரை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் உடன் 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா ஆர் .கே நாகராஜன் MC அவர்கள். 26 வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி புஸிரா பானு நாசர் MC அவர்கள் கலந்து கொண்டனர் மற்றும் கழக நிர்வாகிகள் ,கழகத் தோழர்கள் ,பொது நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்