விஜய் ஆண்டனி தயாரிப்பில், கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன், தனுஷா, ஷியரா, சுனில், லட்சுமி மஞ்சு, பாண்டியராஜன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பூக்கி”. நாயகன் தானென்ற அகந்தை காரணமாக காதலி தனுஷாவை பிரிக்கிறார். காதலை மறக்க ஆன்மிக பாதைக்கு திரும்புகிறார் தனுஷா. உடற்பயிற்சி நண்பர்கள் என மாறுகிறார் அஜய். இருவருக்கும் இன்னொரு காதல் வருகிறது. ஆனாலும், இருவருமே முந்தைய காதலை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள். கடைசியில் என்ன முடிவெடுத்தார்கள். எந்த காதலை ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் கதை. இன்றைய இளம் தலைமுறையினர் மனநிலை, அவர்கள் காதலை, வாழ்க்கையை பார்க்கும் விதம், செய்யும் தவறுகள், முடிவெடுக்கும் விதம் என பல விஷயங்கள் பின்னணியில் பூக்கியை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரா. கதாநாயகியை மனதில் உருவாக்கப்பட்ட படம் என்பதால், படத்தின் கதை, முக்கியமான காட்சிகள் அஜயை சுற்றியே நடக்கிறது. அவரும் துறுதுறு இளைஞனாக, காதலிகளிடம் சிக்கி தவித்து, முடிவெடுக்க முடியாமல் திணறுபவராக, காதல் வலியால் அவதிப்படுவராக நன்றாகவே நடித்து இருக்கிறார். அஜயின் துறுதுறு நடிப்பு இளைஞர்களை கவரும். குறிப்பாக, காதலிகளுடன் சண்டை போடுகிற காட்சிகளில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். முதற்பாதியில் நாய், பூனை பேசுபது சுவாரஸ்யம், சுனில், அந்த ஆன்மிகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறு. உடற்பயிற்ச்சி கூடடத்தில் பிரியங்கா வரும் இடங்களும் சரியானதுதான். கதாநாயகியாக நடித்து தனுஷா உண்மையில் கதைக்கு அவ்வளவு பலம். அவரின் தோற்றம் மட்டுமல்ல, நடிப்பு, கோபம் எல்லாமே அழகு. காதலனை சண்டை போட்டு பிரிகிற சீனில், கார்ப்பரேட் சாமியாரை கேள்வி கேட்கிற சீனில், இன்னொரு காதலில் விழுகிற சீனில், கிளைமாக்சில் கலக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளில் அவ்வளவு அழகாக இருக்கிறார். பெங்களூர் பெண்ணாக வரும் ஷியாரா சம்பந்தப்பட்ட காதல் சீன்களிலும் விறுவிறுப்பு. கார்ப்பரேட் சாமியாக நடித்த சுனில் சம்பந்தப்பட்ட காட்சிகள், அவரின் நடிப்பு பிரமாதம். நாயகனின் பெற்றோர்களாக வரும் பாண்டியராஜன் தம்பதியினர், நாயகியின் பெற்றோர்களாக வரும் ஸ்ரீராம், ராதா காச்சிகளை இன்னும் அதிகரித்து இருக்கலாம். இளசுகளின் உள்ளார்ந்த உணர்வை தெளிவாக திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர்
“பூக்கி” திரைப்படம் விமர்சனம்
