விஜய் ஆண்டணியின் “பூக்கி” ஏப்.13ல் வெளியீடு

Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில்,  மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், கணேஷ் சந்திரா இயக்கத்தில், காதல், நகைச்சுவை படமாக, இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.  இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் பிப். 13ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிவிப்பு நிகழ்வினில் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது:  “இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.  ஊடகம், ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள். மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. வசன உச்சரிப்பு, பின்னணி குரல் பதிவு, நடிப்பு என எல்லாமே சிறப்பாக இருந்தது”.********

இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வரும். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு, எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு குழு அனைவருக்கும் என் நன்றி. இந்த படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவோடு இது பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன். இப்படத்தின் உரிமையை வாங்கிய Zee நிறுவனத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் கணேஷ் சந்திரா பேசும்போது கூறியதாவது:! “இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற ‘ஆக்ஷனை’ மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, ‘பூக்கி’ படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து ‘ஆக்ஷன்-கட்’ சொல்ல ஆரம்பிச்சிருக்கேன். இந்த வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது அவர் வைத்த நம்பிக்கையை நான் கண்டிப்பாக காப்பாற்றியிருக்கிறேன். இந்த படத்தை வெறும் ஆறு மாதங்களில் முடித்திருக்கிறோம். இன்றைய சூழலில் ஒரு படத்தை விரைவாக முடித்து, வணிக ரீதியாகவும், வெளியீட்டிலும் ஒழுங்காக கொண்டு வருவது எளிதல்ல. Zee நிறுவனம் இப்படத்தை வாங்கி விட்டது. அதை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாருக்கு மிகப் பெரிய நன்றி. விஜய் ஆண்டனி சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்புக்கு ஒரே விளக்கம் தான் “தொடர்ந்து முயற்சி செய். தவறாக இருந்தாலும் சரியாக வரும் வரை செய்” என்பார். இரவு, பகல் பாராமல் வேலை செய்யும் அந்த ஆற்றல் எங்களை எல்லோரையும் ஊக்கப்படுத்தியது. இந்த படத்தின் எழுத்தாளர் புதிய பரிதி, நாயகன் அஜய், நாயகி தனுஷா —இந்த மூன்று பேரும் இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இவர்களில்லாமல் இந்த படம் இப்படியாக உருவாகியிருக்காது. இயக்கக் குழு, இசை, எடிட்டிங், உடை வடிவமைப்பு, தயாரிப்பு குழு, அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள். அதனால்தான் இந்த படம் இவ்வளவு வேகமாகவும் அழகாகவும் உருவானது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும், இந்த நிகழ்வுக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.