நடிகர் விஷாலின் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு

நடிகர் விஷால் அவர்களின் தங்கை ஐஸ்வர்யா கிர்தீஸ் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிற்கான தங்க நாணயம் வழங்கப்பட்டது அதே போன்று, ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும், பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிற்கான தங்க நாணயம் வழங்கப்பட்டது.