விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘இரண்டு வானம்’

‘முண்டாசுப்பட்டி’,  ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் கோடையில் வெளியாகிறது. சத்தியஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இரண்டு வானங்கள்,  ஒரே பார்வை, பேரார்வத்தோடு இயங்கும் உலகம் என இந்த கோடையில் திரையரங்குகளில் வெளியாகிறது ‘இரண்டு வானம்’.**********

*தொழில்நுட்பக்குழு விவரம்: தயாரிப்பு: டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் & அர்ஜூன் தியாகராஜன், இயக்கம்: ராம்குமார், இசை: திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவு: தினேஷ் கே. பாபு, படத்தொகுப்பு: சான் லோகேஷ், கலை இயக்கம்: கோபி ஆனந்த், ஆடை வடிவமைப்பாளர்: ஏ. கீர்த்தி வாசன், ஆக்ஷன்: விக்கி, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்: ஹரிஹர சுதன்.