“வித் லவ்”திரைப்படம் பிப்.6ல் வெளியீடு

சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி.எண்டர்டெயின்மண்ட் இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ்”  திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகை அனஸ்வரா ராஜன் பேசியதாவது.: “என் முழு குழுவிற்கும் ஒரு பெரிய நன்றியை சொல்லிக்கொள்கிறேன். மதன் என்னிடம் கதை சொல்ல வரும் போது, ஒரு காட்சியை படமாக்கி காட்டினார் அது எனக்கு மிகவும் பிடித்தது உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவரும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தனர். காவ்யா உங்களை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் மனதார காதலிப்பார்கள்.இந்த குழு என்னை நிறைய சிரிக்க வைத்தது. இந்த சினிமா துறையும், இந்த நகரமும் எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கக் காரணமாக இருந்தது இந்த அனுபவம் தான். சௌந்தர்யா மேடம் எனக்கு ஒரு பெரிய அக்கா போல அன்பும் ஆதரவையும் வழங்கினார்.*********

மதன் நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் க்யூட்டானவர். அதே சமயம், அவர் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவர், எனக்கு அவர் தந்த மோனிஷா பாத்திரம் ரொம்பவே பிடிக்கும். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. மோனிஷா, சத்யா  இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் வேலை செய்ததற்குக் காரணம், திரைக்கு வெளியே  நடிகர் அபிஷந்த் உடன் எனக்கு இருந்த நட்பு தான். மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்த அபிஷந்திற்கு நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. வித் லவ் பிப்ரவரி 6 ஆம் தேதி வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

சௌந்தர்யா ரஜினிகாந்த்  பேசியதாவது..,   நான் உண்மையிலேயே மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். கோவா படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிப்பாளர் என்ற பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதற்கும் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.சிபி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. #Thalaivar173 ஒரு மிகப் பெரிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. அந்தப் படம் டெட்லியாக இருக்கும். மதன் எதிர்காலத்தில் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுப்பார்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். அபிஷந்த் உள்ளே ஒரு இயக்குநர் இருந்தாலும், இந்த படம் 100 சதவீதம் மதனின் படம் தான். மதன் மிக இனிமையானவர், அந்தக் கணத்தில் வாழத் தெரிந்தவர்.  படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.