“ரேகை” திரைப்பட விமர்சனம்

ஜீ5 இணையதளம் தயாரிப்பில் தினகரன் இயக்கத்தில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கிரைம்”.  பிரபல துப்பறிவு  எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய ஒரு நாவலின் மையக் கதையிலிருந்து ஒரு கருவை எடுத்து திரைப்படமாக  தந்துள்ளார் இயக்குனர் தினகரன். இந்த திரைப்படம் ஜீ5 இணையதளத்தில் 7 பாகங்களாக ஒளிப்பரப்ப படுகிறது. இந்த  படத்தில்  கதைப்படி உதவி ஆய்வாளர் பாலஹாசன் மற்றும் பெண் காவலர் பவித்ரா ஜனனி ஒரு மரணத்தை பற்றி விசாரிக்க செல்கிறார்கள். ஆனால் அந்த மரணம் விபத்தல்ல, அதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என சந்தேகிக்கிறார்கள். அப்படி சாதாரணமாக விசாரிக்க துவங்கும் அந்த குற்றச் சம்பவம் அடுத்தடுத்த சில மரணங்களால் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. விபத்து என்பது மாறி கொலை என்பதை கண்டறிகிறார்கள். அவர்களை கொலை செய்தது யார்? இந்த சாதாரண மனிதர்களை கொன்றது யார்?  என்பதுதான் கதை.  நாயகனாக பாலஹாசன். காவல்த்துறை ஆய்வாளருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். வழக்கை விசாரிப்பது, அதன் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது, சண்டைக்காட்சிகளில் அசத்துவது என இந்த கதைக்களத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார். பவித்ரா ஜனனி துப்பறிவு காவலராக இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.  வினோதினி வைத்யநாதன் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். அஞ்சலி ராவ் ஒரு முக்கியமான எதிர்மறை கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். ராஜ் பிரதாப்பின் இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. மகேந்திரா ஹென்றி ஒளிப்பதிவில் தென்காசியின் குறுகலான இடங்கள், மருத்துவமனை, காவல் நிலையம் என அத்தனை இடங்களுக்குள்ளும் புகுந்து அமர்க்களப்படுத்தியிருக்கிறது. துரை படத்தொகுப்பு ஏழு பாகங்களின்  தேவையான விஷயங்களை அழகாக சொல்லி கதையின் ஓட்டத்தை சிறப்பாக்கி இருக்கிறது. இம்த கதை ஒரு மர்மம், மருத்க்துவ குற்றச்செயல் என்பதையும் தாண்டி சாதாரண மக்களின் வாழ்க்கை எவ்வாறு பெரிய சக்திகளிடம் சிக்கிக் கொள்ளுகிறது என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் தினகரன். ஒரு பாகத்தை பார்த்த்து முடித்ததும் அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிபார்க்க வைக்க்றது. நாவல் பிரியர்களுக்கு “ரேகை” ஒரு வரப்பிரசாதம்.