ஜீ5 தயாரிப்பில், அமீன் பாரீப் இயக்கத்தில், முனிஸ்காந்த், ராஜேஷ் மாதவன், கௌதமி, வின்சு ராகே, சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, விக்னேஷ்வர், அருண்குமார், சித்திரசேனன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “காக்கீ சர்க்கஸ்”. ஒரு கிளைச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளராக இருக்கும் முனிஷ்காந்த் புத்தகம் எழுதும் பழக்கமுள்ளவர். அத்துடன் ஆன்மீகவாதி. அதனால் தான் எழுதிய புத்தகங்களை கைதிகளுக்கு படிக்கக் கொடுப்பார். அத்துடன் சிறைச்சாலையிலிருக்கும் ஒரு கோயிலின் உண்டியலில் கைதிகளுக்கு கொடுக்கும் சம்பளத்திலிருந்து ஒரு சிறு தொகையை உண்டியலில் போடச்சொல்வார். ஒருநாள் அந்த உண்டியலிருக்கும் ஒன்றரை லட்ச ரூபாய் திருட்டு போய்விடுகிறது. பல அடுக்கு பாதுகாப்பான சிறைச்சாலைக்குள்ளேயே கோயில் உண்டியல் பணத்தை திருடியவன் யார்? என்பதை மேலதிகாரிகளுக்கு தெரியாமல் முனிஸ்காந்தும் ஒரு காவலரும் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் கதை. இப்படம் 7 பாகங்களாக ஜீ5 இணையதளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் நகைச்சுவை நடிகராகவும் குணாசித்திர பகுதிநேர நடிகராகவும் நசித்திருந்த முனிஷ்காந்த் இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தற்காக அவர் தனிப்பட்ட பதிற்சி எடுத்து நடிக்கவில்லை. வழக்கமான தனது உடல் மொழியோடும் வசன உச்சரிப்போடும் நடிதுள்ளார். மென்மையான அத்காரி. காவல்த்துறையினருக்குறிய காக்கிச் உடுப்பை அணியாமல் படம் முழுக்க சாதாரண உடுப்பிலேயே அவரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதில் திருடனாக நடித்திருக்கும் ராஜேஷ் மாதவனின் பேரூந்து நடத்துனாராக நடித்து பார்வாளர்களின் கைத்தட்டலை பெறுகிறார். பேரூந்தில் திருடும் ஒரு பெண்ணை காதலிக்கும் அவர் கேரளாவுக்கு தப்பிச் சென்று தன் திருட்டு காதலியுடன் பேசும் வசனங்கள் நகைச்சுவையானது. உதவி கண்காணிப்பாளராக நடித்திருப்பவரின் காதல் காட்சிகள் படத்தின் துப்பறிதலுக்கு வேகத்தடையாக இருந்தாலும் அது ரசிக்கும்படி உள்ளது. சிறைச்சாலை உண்டியல் பணத்தை திருடிய திருடன் யார்? என்பது முன்கூட்டியே தெரிந்துவிடுவதால் சுவாரசியம் குறைந்து விடூகிறது. ஆனாலும் கதை அவன் எப்படி திருடுகிறான் எதற்காக கோயில் உண்டியலை திருடுகிறான் என்ற கோணத்தில் படம் நகர்வதால் அதை ரசிக்க முடிகிறது. உதவி கண்காணிப்பாளரை காதலிக்கும் பெண் தமிழ்த்திரைவானில் மின்னுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. 7 ஊர்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை ஒன்றிணைத்து ஒரு படமாக எடுத்துள்ளார்கள்.
“காக்கீ சர்க்கஸ்” திரைப்பட விமர்சனம்
