திருச்சி 24, மே:- திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை இன்று திறந்து அமைச்சர் கே.என். நேரு. தடுப்பூசி போடும் பணியையும் பார்வையிட்டார். அதை தொடர்ந்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளையும் ஆய்வு செய்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சி அளிப்பதுடன் கொரோனாவை விரைவில் வெல்வோம் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது என தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தவாறு அரசின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொண்டார்.