கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை எதிர்க்க காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் இணைந்து பல்வேறு இடங்களில் செயல்படுகிறார்கள். எம்எல்ஏக்களை மத்திய அரசால் விலைக்கு வாங்க முடியாததால், விசாரணை அமைப்புகளை அரசுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் டிசம்பர் 8-ம் தேதியும், 2-ம் கட்டம் 10-ம் தேதியும், 3-ம் கட்டம் 14-ம் தேதியும், 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.
இடதுசாரி அரசை எதிர்ப்பதில் பாஜகவும், காங்கிரஸும் கைகோர்கின்றன என்கிறார் பினராயி விஜயன்
