கொவிட் தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,000 அதிகம் கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.24 விழுக்காடாக அதிகரிப்பு

கொவிட்-19 பெருந்தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,173 அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 13,940 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,85,636 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 58.24 விழுக்காட்டை எட்டியுள்ளது. தற்போது 1,89,463 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

கொவிட்-19 தொற்றை பரிசோதனை செய்யும் பரிசோதனைச்சாலை வசதிகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கடந்த 24 மணி நேரத்தில் 11 புதிய பரிசோதனைச் சாலைகளை சேர்த்துள்ளது. இந்தியாவில் கொவிட்டை கண்டறியும் 1,016 பரிசோதனைச் சாலைகள் இப்போது உள்ளன. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 737, தனியார் பரிசோதனைச் சாலைகள் 279. நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 560 (அரசு : 359 + தனியார் : 201), ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 369 (அரசு : 346 + தனியார் : 23), CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 87 (அரசு : 32 + தனியார் : 55) ஆகும்.

ஒவ்வொரு நாளும் பரிசோதனை செய்ய வேண்டிய மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டெ வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,15,446 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 77,76,228 பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.