முதல் அமைச்சரிடம் வாழ்த்துப்பெற்ற எம்.எல்.ஏ

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமியை அவரது இல்லத்தில் 25.8.2020 – செவ்வாய்க் கிழமை அன்று கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக் கப்பட்டுள்ள அருண்குமார், எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான வேலுமணி உடன் இருந்தார்.