மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி.

மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப் பட்டுள் ளது.  இது தொடர்பாக ஏற்கனவே சுற்றுக்கு விடப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறை (SOP) 2020 செப்டம்பர் 1ஆம் தேதியன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள நிகர்நிலை மாநாட்டில் பல்வேறு மெட்ரோ கம்பெனிகளுடன் விவாதிக்கப் பட்டு இறுதி செய்யப்படும். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தயரித் துள்ள இந்த நிலையான இயக்க நடைமுறைகளைத் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் ஆராயுமாறு அனைத்து மண்டல மேலாண் இயக்குநர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மெய்நிகர் மாநாட்டின் போது அனைத்து ஆலோசனைகளும் ஆராயப்பட்டு நிலையான இயக்க நடைமுறை இறுதி செய்யப்படும்.