“டெவில் டபுள் நெஸ்ட் லெவல்” திரைப்பட விமர்சனம்

நடிகர் ஆர்யா தயாரிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், நிகழ்கள் ரவி, கீதிகா திவாரி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டெவில் டபுள் நெஸ்ட் லெவல்”. சந்தானம் வித்தியாசமான முறையில் சினிமா விமர்சனம் செய்யும் விமர்சகராக இருக்கிறார். இவரது வீட்டுக்கு ஒரு படத்துக்கு விமர்சனம் எழுத குடும்பத்தினருடன் வர அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை எடுத்துக் கொண்டு தந்தை நிழல்கள் ரவி, அம்மா கஸ்தூரி, தங்கை யாஷிகா ஆனந்த் ஆகியோர் திரையரங்கிற்கு செல்கிறார்கள். அந்த திரையரங்கில் தயாரிப்பாளராக இருந்த செல்வராகவன் பேயாக மாறி விமர்சகர்களை கொலை செய்து வருகிறார். இது தெரியாமல் சந்தானத்தின் குடும்பம் அந்த திரையரங்கிற்குள் செல்கிறது. இதை அறிந்த சந்தானமும் அந்த திரையரங்கிற்குள் செல்கிறார். அங்கு திரையில் நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் எல்லோரும் திரையில் காட்சிகளாக தெரிகிறார்கள். பேயாக இருக்கும் செல்வராகவனிடமிருந்து. தனது குடும்பத்தை சந்தானம் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. தனக்கே உரித்தான பாணியில் சந்தானம் நகைசுவை வசனங்களுடன் பேசி ரசிகர்களை குதுகலப்படுத்தியுள்ளார். அவருடன் மொட்டை ராஜேந்திரன் அடிக்கும் லூட்டி அலாதியானது. விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தை பார்வையாளர்கள் ரசித்து சிரித்து  பார்க்கிறார்கள். வித்தியாசமான் நடிப்பை தந்துள்ளார் நிழல்கள் ரவி. அவருக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார் கஸ்தூரி. யாஷிகா ஆனந்த் கவர்சிசியை காட்ட தவறவில்லை. படத்தின் அத்துனை அம்சங்களையும் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார் இயக்குநர் பிரேம் ஆனந்த். பொழுதுபோக்கான திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் ஆர்யா. கெளதம் வாசுதேவ் மேனன் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக பொறுத்தமாக நடித்துள்ளார். பேயாக வரும் கீதிகா திவாரி சிறப்பாக தனது நடிப்பை தந்துள்ளார். வீணைக்கப்படாத விறுவிறுப்பான நகைச்சுவை படம் “டெவில் டபுள் நெஸ்ட் லெவல்”.